பிரிநிலை யெச்சம் சூ. 35 | 259 |
ஆதி *கள்ளன் யாவன்?-இவனே கள்ளன்-ஒருவனைப் பிரித்துக் குறித்துக் காட்டுவதால் பிரிநிலையெச்சம். இவனோ பரிசில் பெற்றான்-பிரிநிலை இவன்தானே கொண்டான், இவன்தானோ கொண்டான்-பிரிநிலையென்பர். இங்கு ‘தான்’ ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல்லாகக் கருதலே சிறப்பு. சிவ பிரிநிலையெச்சம் என்பதற்குப் ‘பிரிக்கப்பட்ட நிலைமையினையுடைய பொருள் (சொல்) எஞ்சி நிற்குமாறு அமைவது’ என்பது யாவரும் கொண்ட பொருள். ஆனால் காட்டும் உதாரணத்தை விளக்கும்போது மாறுபடுகின்றனர். ‘அவனே கொண்டான் என்பது, ‘பலருள் அவன் ஒருவனே கொண்டான்’ என்னும் பொருள் தருவது. பலருள் பிரிக்கப்பட்டவர் யார் என்பதில் இளம் பூரணருக்கும் சேனாவரையருக்கும் கருத்து வேறுபாடுண்டு. பலருள் பிரிக்கப்பட்டவன் அவன் என்பது இளம் பூரணர் கருத்து; பிரிக்கப்பட்டவன் அவனாயினும் அவனேநோக்கப் பிறரும் பிரிக்கப்பட்டவரே யாதலின் பிரிக்கப்பட்டவர் பிறரே என்பது சேனாவரையர் கருத்து. அதனால், இளம்பூரணர் அவனே என்பதில் உள்ள ஏகாரம் பிரிக்கப்பட்ட அவன் என்பதைக் கொண்டு முடிந்தது-அதாவது ஏகாரம் அவன் என்பதை எஞ்சி நின்றது என்பது இளம்பூரணர் விளக்கம்; பிரிக்கப்பட்டார் பிறர் ஆகலின் அவனே என்பதிலுள்ள ஏகாரம் பிறர் கொண்டிலர் எனும் தொடரை எஞ்சி நின்று அதனையே கொண்டு முடிந்தது என்பது சேனாவரையர் விளக்கம். நச்சினார்க்கினியர், இளம்பூரணர் கருத்தைக் கொண்டவராயினும் அவனே என்பதிலுள்ள ஏகாரம் அவன் என்பதற்கு முடிபான கொண்டான் என்பதைக் கொண்டுமுடிந்தது என்பர். சேனாவரையரால் மறுக்கப்படும் உரையாசிரியரும் நச்சினார்க்
* உதாரணம் எச்சம் என்பதை விளக்கவில்லை. |