கினியர் கூறியது போலவே கூறினார் என்பது சேனாவரையர் உரையால் தெரிய வருவதாம். இளம்பூரணர், “அவனே எனப் பிரிநிலையெச்சம் ஏகாரத்தானின்று, அவனேயெனப் பிரிக்கப்பட்டானையே கொண்டு முடிதல்” என எழுதியதில் ‘பிரிக்கப்பட்டானையே கொண்டு முடிதல் என்பதற்குப் பிரிக்கப்பட்டான் வினையையே கொண்டு முடிதல் எனப்பொருள் காணின் உரையாசிரியர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர் மூவரும் ஒரே கருத்தினர் என்னலாம். அவனே என்பதில் உள்ள ஏகாரம் அவன் என்பதையே கொண்டு முடிந்தது என இளம்பூரணர் கூறியது ஏற்பதற்கில்லை. ஏன் எனின் எஞ்சு பொருள் (சொல்) எச்சத்துக்குப் பின்னர் வருமேயன்றி முன்னர்வராது. வினையெச்சம் ‘வந்தான் உண்டு’ எனப்பின்னர் வருதல்போலக் கொள்ளலாமேயெனின் உண்டு வந்தான் என்பதுபோல ‘ஏ அவன்’ எனவாராமையின் கொள்ளலாகாது. அதனால் இளம் பூரணர் கூறிய ‘பிரிக்கப்பட்டானையே கொண்டுமுடிதல்’ என்பதற்குப் பிரிக்கப்பட்டான் வினையையே கொண்டுமுடிதல்’ என்று கொள்வதே சிறக்கும். சேனாவரையர் பிரிக்கப்பட்டார் பிறர் எனக்கொண்டது அத்துணைச் சிறப்பின்று. கவரும் “தானெப்பட்டான் பிறரிற் பிரிக்கப்பட்ட வழிப்பிறரும் அவனிற் பிரிக்கப்பட்டமையான் அவை (ஏகார ஓகாரங்கள் பிரிநிலை கொண்டனவயோமென்க” என எழுதியதில் முதலில் பிரிக்கப்பட்டான் தான் என்பதை ஏற்றுப் பின்னரே பிறர் என்றமையால் அவர்க்கும் அவனே என்பதில் பிரிக்கப்பட்டான் அவன் என்பதே முதற்கருத்து என்னலாம். அதனால் மற்றையோர் கொள்ளும் பொருளே சிறந்தது என்னலாம். இனித் தெய்வச் சிலையார், ‘பிரிநிலைப் பொருள் தரும் இடைச்சொற்களாகிய ஏகார ஓகாரங்களைப்பற்றியது இச்சூத்திரம்’ எனக் கொண்ட மற்றையோர் கருத்துக்கு மாறாக, இடைச் சொற்களைக் கொள்ளாமலேயே பலருள் ஒருவனைப் பிரித்துக் கூறின் அவனையன்றி மற்றையோரை எஞ்சி நிற்பது பிரிநிலை யெச்சம் என்றார். ‘இவன் கல்வியுடையன் என்ற |