பக்கம் எண் :

பிரிநிலை யெச்சம் சூ. 35261

வழிச் சொல்லுவான் இவ்வவையத்தாருள் எனக்கருதினானாயின் இவ்வவையத்தாருள் என்பது எஞ்சி நின்று பிரிநிலை யெச்சமாயிற்று என்றார். அவர் பிரிநிலை என்பதற்குப் ‘பிரிக்கப்பட்ட பொருள்தவிர எஞ்சி நிற்கும்பொருள்’ எனக்கொண்டார். ‘இவன் கல்வியுடையன் என்பதில் பிரிக்கப்பட்டவன் இவன் என்றும் நிலை (நின்றது) இவ்வவையத்தார் என்றும் கொள்ளல்வேண்டும். அதனால் பிரிநிலையெச்சம் என்பதற்குப் பிரிநிலையாகிய எச்சம் எனப்பொருள் கொள்ளல் வேண்டும். தெய்வச்சிலையார் ஏகார ஓகாரங்களைக் கொள்ளாமைக்கு, அவை இடையியலில் பிரிநிலைப் பொருளில் வரும் எனக் கூறிவிட்டமையால் இங்கும் கூற வேண்டியதில்லை எனக் கருதியதாகலாம்.

வினையெச்ச முடிபு

426 வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு
  நினையத் தோன்றிய முடிபா கும்மே
யாவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே.      (36)
  
 (வினை எஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத்தோன்றிய முடிபு ஆகும்மே
ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே.)

ஆ. மொ. இல.

The tens-denoting verb and the appellative
verb appear as the complements of the
adverbial participle when thoght is bestowed
upon it.

பி. இ. நூ.

இ. வி. 429. (தொல். சூத்திரமே)

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், நிறுத்த முறையானே வினையெச்சத்திற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.