பக்கம் எண் :

262தொல்காப்பியம்-உரைவளம்

உரை : வினையெச்சம் முடியுங்கால்வினையும் வினைக்குறிப்பும் கொண்டு முடியும், அவ்விடத்துக் குறிப்பு வினைச்சொல் ஆக்கச் சொல்லோடு வரும், எ-று.

வ-று : ‘உழுது வந்தான்’ என்பது வினையெச்சம் தெரிநிலை வினைகொண்டு முடிந்தது. ‘மருந்துண்டு நல்லன் ஆயினான்’ என்பது வினையெச்சம் 1வினைக்குறிப்புக் கொண்டு முடிந்தது; அவ்விடத்து வினைக்கு ஆக்கமொடு வந்தவாறு கண்டு கொள்க.

இனி, ‘நினயைத் தோன்றிய’ என்றதனான், ‘உழுதுவருதல்’ ‘உழுதுவந்தான்’ எனத் 2தொழிற்பெயரானும் முடியும் என்றவாறு.

மற்று, இச்சூத்திரத்தால் வினையெச்சத்திற்கு முடிபு கூற வேண்டியது என்னை? வினையியலுள்,

‘முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின’ (வினை. 31) என்றும், ஒழிந்தனவற்றுக்கு.

“ஏனை யெச்சம் வினைமுத லானும்
ஆன்வந் தியையும் வினைநிலை யானும்”       (வினை 33)


1. நல்லன் என்பது வினைக்குறிப்பு. ஆயினான் என்பது ஆக்கச்சொல்.

2. வருதல் என்பது தொழிற்பெயர். வந்தான் என்பது வினையாலணையும் பெயர். வினையாலணையும் பெயரைத் தொழிற் பெயர் என்றும் கூறுவர்.