வினையெச்ச முடிபு சூ. 36 | 263 |
முடியும் என்றும் கூறியதே அமையும் பிறவெனின், அதற்கு விடை ; 3ஆண்டு வினைமுதலானும் முடியும் என்புழிப் பெயர் வினைமுதலானும் முடியும் என்பது பட்டது; என்னை? வினை வினைமுதல் என்றும் பெயர் வினைமுதல் என்றும் பகராது பொது வகையாற் கூறினாராகலின் இச்சூத்திரம் வேண்டும். இது கூறாக்கால், ‘உழுது சாத்தன்’ எனப் பெயர் வினை முதலானும் முடிவான் சொல்லும் என்பது. 4அன்றியும் வினையெச்சத்திற்கு வினைக்குறிப்பு முடிபாங்கால் ஆக்கமொடு வருதல் எடுத்தோத வேண்டும் என்பது. சேனா இ-ள் : வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் முடிபாம்; ஆண்டைக் குறிப்பு வினை ஆக்க வினையோடு வரும், எ-று. உ-ம் : உழுது வந்தான், மருந்துண்டு நல்லனாயினான் எனவரும்.
3. வினைதல் என்பது பெயர் வினைமுதல் வினை வினைமுதல் என இருவகைப்படும். உழுது வந்தான் என்பதில் வந்தான் என்பது வந்தவனாகிய ஒருவனைக் குறிக்கும் போது பெயர் வினைமுதல்; வந்தான் என்னும் வினையைக்குறிக்கும் போது வினை வினைமுதல். ‘முதல் நிலை’ ‘ஏனையெச்சம்’ என்னும் சூத்திரங்களில் வந்த வினை முதல் என்பது பெயர் வினைமுதலையும் குறித்துவிடும். வினை வினை முதலையே கொண்டு முடிவது வினையெச்சம் என்பது அச்சூத்திரங்களாற் பெறப்படாது; அதனால் இச்சூத்திரம் வேண்டும். இச்சூத்திரத்தில் பெயர் வினைமுதலைக்கொண்டு முடிவதைத்தழுவிக் கொள்ளுதல் வேண்டும். அதனால் தான் “இனி.... தொழிற் பெயரானும் முடியும் என்றவாறு” என எழுதினார் இளம்பூரணர். 4. இக்காரணம் நன்று. |