உழுது வருதல், உழுதுவந்தவன் என வினையெச்சம் 1வினைப் பெயரோடு முடிதல் ‘நினையத் தோன்றிய’ என்றதனாற் கொள்க. வினையெச்சத்திற்கு முடிபு வினையியலுட் கூறப்பட்டமையான் இச்சூத்திரம் வேண்டவெனின், இதற்கு விடை 2ஆண்டே கூறினாம். 3“வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே” (குறுந். 84), “வில்லக விரலிற் பொருந்தியவர் நல்லகஞ் சேரினொரு மருங்கினமே” (குறுந். 370) எனவும்; கற்று வல்லன், பெற்றுடையன் எனவும் வினைக் குறிப்பு ஆக்கம் இன்றி வந்தனவால் எனின், ‘ஆக்கமொடு வரும் என்றது பெரும்பான்மை குறித்ததாகலிற் சிறுபான்மை ஆக்கமின்றியும் வரும் என்பது. தெய் வினையெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : வினையெச்சமாகவுடைய சொல்லிற்கு வினையும் வினைக்குறிப்பும் நினையத் தோன்றிய முடிபாகும்; ஆண்டு வினைக்குறிப்பு ஆக்கச் சொல்லோடு அடுத்து வரும், எ-று.
1. வினைப்பெயர் = தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும். 2. ஆண்டுக் கூறியதாவது : “குறிப்பும் என்னும் உம்மை யாற்றழுவப்படுவது சேய்த்தாகலிற் றெற்றென வளிக்காமையானும் வினை முதல் என்பது பெயர்க்கும் வினைக்கும் பொதுவாகலானும் வினையும் எனல் வேண்டும் என்பது” (வினையியல் 35 உரை) - இதன் விளக்கம் வினையியல் உரை வளத்தில் பார்க்க. 3. பொருள் : வேங்கைமலர் மணமும் காந்தள் மலர் மணமும் வீசி ஆம்பல் மலரைக் காட்டிலும் தான் (தலைவி) தண்மையுடையாள். |