பக்கம் எண் :

வினையெச்ச முடிபு சூ. 36265

1‘நினையத் தோன்றும்’ என்றதனான், ஆராயத் தோன்றும் என்று கொள்க. வினையியலுட் கூறிய வினையெச்சம் ஆராய்தல் வேண்டாமையின் அஃதன்று என்று கொள்ளப்படும்.

உ-ம் : அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
 வழுக்கியுங் கேடீன் பது       (குறள். 165)

என்பதனுள், “கேடுபயத்தற்கு அழுக்காறு தானேயமையும் பகைவர் கேடு தருதல் தப்பியும் வரும்” எனப் பொருளுரைக்க வேண்டுதலின், ‘வரும்’ என்பது எஞ்சி நின்றது.

அற்றா ரழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி       (குறள். 226)

என்பதற்குப் “பொருளற்றாரது குணங்களை அழிக்கும் பசியைப் போக்குவது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம்” என உரைக்க வேண்டுதலி்ன், ‘ஆம்’ என்னும் வினைக் குறிப்பு எஞ்சி நின்றது.

நச்

இது வினையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள் : வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபு ஆகும்-வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் ஆராயத் தோன்றிய முடிபு சொல்லாம், ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே-ஆண்டுக்குறிப்பு முற்று ஆக்க வினையோடு வரும், எ-று.


1. வினையியலுட் கூறும் வினையெச்சம் ‘உழுது வந்தான்’ எனவருமிடத்து ஆராய்ச்சியே யில்லாமல் உழுது என்பது வந்தான் என்பதை எஞ்சி நின்றது புலப்படும். அதனால் இச்சூத்திரத்தாற் கூறப்படும் வினையெச்சம் ஆராய்ந்தே கொள்ளப்படும். தெய்வச்சிலையார் காட்டிய உதாரணங்களைக் கொண்டு ஒரு தொடரில் வெளிப்படாமல் மறைந்து கிடக்கும் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பும் வினைமுற்றுமே வினையெச்சம் என இச்சூத்திரம் கூறுவதாக அவர் கொண்டார் என உணரலாம். அவர் உணர மற்றையோரினும் வேறுபட்டது.