பக்கம் எண் :

266தொல்காப்பியம்-உரைவளம்

உ-ம் :உழுது வந்தான்
  மருந்துண்டு நல்லன் ஆயினான்

எனவரும். ‘நினைய’ என்றதனான்,

உழுது வருதல்

உழுது வந்தவன

எனத்தொழிற் பெயரோடும் வினைப் பெயரோடும் முடிதலும் கொள்க.

1ஈண்டு இவ்வினையெச்ச முடிபு கூறுகின்றவர், வினையிற்கண் “முதனிலை மூன்றும் (வினை. 33) என்னும் சூத்திரம் முதலிய மூன்று சூத்திரத்தான் வினையெச்சத்திற்கு முடிபு கூறியது என்னை? எனின், ஈண்டுக் கூறிய பொது விதிக்கு ஆண்டு மூன்று சூத்திரத்தானும் மூவகையாகச் சிறப்பு விதி கூறினார், ‘எதிரது போற்றல்’ என்னும் தந்திரவுத்தியால் என்க.

இனி,

“வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண் ணியளே”       (குறுந். 84)

“வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகம் சேரின் ஒரு மருங் கினமே”       (குறுந். 370)

என்றாற் போல்வன பிறவும் ஆக்கம் விரிந்து அல்லது பொருள் உணர்த்தாமை யுணர்க.

வெள்

இது வினையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள் : வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் முடிபாகும்; அவ்விடத்துக் குறிப்பு வினைஆக்க வினையோடு வரும், எ-று.

உ-ம் : உழுது வந்தான், மருந்துண்டு நல்லன் ஆயினான் எனவரும்.


1. மற்றையோர் கூறும் காரணத்தினும் நச்சினார்க்கினியர் கூறும்

இக்காரணம் சிறக்கும்.