வினையெச்ச முடிபு சூ. 36 | 267 |
உழுது வருதல், உழுது வந்தவன் என வினையெச்சம் வினைப்பெயரொடு முடிதல் ‘நினையத் தோன்றிய’ என்பதனாற் கொள்ளப்படும். குறிப்புவினை ஆக்கமொடு வரும் என்றது பெரும்பான்மை குறித்ததாகலிற் ‘கற்று வல்லன்’ ‘பெற்று உடையன்’ எனச் சிறுபான்மை ஆக்கம் இன்றியும் வரும் என்பர் சேனாவரையர். ஆதி வினையெச்சத்துக்குத் தெரிநிலைவினை குறிப்பு வினை இரண்டும் முடிவாக நிற்கும். குறிப்பு வினை முடிபாயின் ஆக்கப் பொருள் தந்து நிற்கும். படித்து-வினையெச்சம், தேறினான் தெரிநிலை வினையுடன் முடிந்தது. படித்து வல்லவன் ஆயினான்-வல்லவன் குறிப்பு வினை ஆக்கமா முடிந்தது. பெயரெச்ச முடிபு 427. | பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே (37) | | | | (பெயர் எஞ்சு கிளவி பெயரொடு முடிமே). |
ஆ. மொ. இல. The adjectival participle is completed by the noun. பி. இ. நூ. நன் 340 செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டில் செய்வ தாதி அறு பொருட் பெயரும் எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே. இல. வி. 243. அவற்றுட் செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டில் செய்வ தாதி அறு பொருட் பெயரும் முடியும் முறையது பெயரெச் சம்மே. |