பக்கம் எண் :

268தொல்காப்பியம்-உரைவளம்

முத்து. வி. 35

காலம் பொருள் நிலம் கருவி வினைமுதல்
வினையோர் அறுவகைப் பொருட்கும் உரிய

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே பெயரெச்சத்திற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

உரை : பெயரெச்சம் பெயர் கொண்டு முடியும், எ-று.

வ-று : உண்ணுஞ் சாத்தன், உண்ட சாத்தன் எனவரும். உண்ணும், உண்ட என்பன பெயரெச்சம்; மற்று இது கூற வேண்டியது என்னை?

நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும்       (வினை. 35)

பெயர் கொண்டு முடிதல் கூறப்பட்டது பிறவெனின், அதற்கு விடை; 1ஆண்டு வினை முதற் கிளவியும் வினையும் எனவே வினைச் சொல்லும் முடியும் என்பது பட்டது. வினைமுதற் கிளவி என்றக்கால் வினைமுதலும் வினை முதலாகலானும், இனி வினை என்றக்கால் வினைப் பெயரேயன்றி வினைச்சொல்லும் ஆகலானும் இச்சூத்திரம் வேண்டு்ம் என்பது.

சேனா

இ-ள் : பெயரெச்சம் பெயரொடு முடியும், எ-று.

உ-ம் : உண்ணுஞ் சாத்தன், உண்ட சாத்தன் எனவரும்.


1. (ஆண்டு-நிலனும் பொருளும் என்னும் சூத்திரத்தில்) வினை முதற்கிளவி என்பது பெயர் வினை முதலையும் வினை வினை முதலையும் குறிக்கும். அப்படியானால் ஆண்டு வினை வினை முதலைக் கொண்டு முடிவதும் பெயரெச்சம் எனப்பட்டுக் குற்றமாம்; வினை என்பது வினைப் பெயரையும் வினைச் சொல்லையும் குறிக்கும். அப்படியானால் வினையைக் கொண்டு முடிவதும் பெயரெச்சம் எனப்பட்டுக் குற்றமாம். அதனால் பெயரொடு முடிவதே பெயரெச்சம் என்னும் இச்சூத்திரம் வேண்டுவதாயிற்று.