பெயரெச்ச முடிபு சூ. 37 | 269 |
‘அவ்வறு பொருட்கும் ஓரன்ன வுரிமைய’ (சொல். 234) என்றதனாற் பெயரெச்சம் பொருள்படு முறைமை கூறினார். முடிபு எச்ச வியலுட் பெறப்படும் என வினையியலுட் கூறியவாறு கடைப்பிடிக்க. தெய் * பெயரெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : பெயரெச்சமாகவுடைய சொல் பெயரொடு முடிவு பெறும், எ-று. உ-ம் : | 1“துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன் | | தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன் தொடர்புள் இனையவை தோன்றின்” (கலி. 41) |
என்றவழி, ‘அவன் தொடர்பு’ என வேண்டுதலின் ‘அவன்’ என்னும் பெயர் எஞ்சி நின்றது. ‘உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே’ (கிளவி. 1) ‘என் மனார் ஆசிரியர்’ என வேண்டுதலின் ‘ஆசிரியர்’ என்னும் பெயர் எஞ்சி நின்றது.
* பெயரெச்சமுடிபு வினையியலிற் கூறப்பட்டது ஆதலின் இங்குக் கூறப்படும் பெயரெச்சம் என்ப வெளிப்படாது மறைந்து கிடக்கும் பெயரையாம் என்பது தெய்வச்சிலையார் கொள்கை. 1. பொருள் : தொடரும் அடுக்கு மலைகளையுடைய மலைநாடன் நம்மைத் துறக்க மாட்டான்; நம்மிடம் கொண்ட அன்பினுள் இன்ன கொடுமைகள் அவன்பால் தோன்றின். |