2‘மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப் பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே” (குறுந். 71) இதனுள் ‘எனக்கு’ என வேண்டுதலின் வேற்றுமை யேற்ற பெயர் எஞ்சி நின்றது. நச் இது பெயரெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. இ-ள்: பெயரெஞ்சுகிளவி பெயரொடு முடிமே-பெயரெச்சம் பெயர்ச் சொல்லோடு முடியும், எ-று. உ-ம் : | உண்ணும் சாத்தன் | | உண்ட சாத்தன் |
எனவரும். ஈண்டுப் பெயரொடு முடியும் என்ற பொது விதி நோக்கி ‘நிலனும் பொருளும்’ (வினை. 37) என்னும் சூத்திரத்தான் இப்பெயர்தாம் பொருள் வகையான் ஆறு வகையவாம் என்று ‘எதிரது போற்றல்’ என்னும் உத்தியால் கூறினார். வெள் இது பெயரெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. இ-ள் : பெயரெச்சம் பெயரொடு முடியும், எ-று. உ-ம் : உண்ணும் சாத்தன், உண்ட சாத்தன் என வரும்.
2. பொருள் : தோன்றும் சுணங்கையும் அழகிய பகட்டான இளமுலையினையும் பெருந்தோளையும் நுண்ணிய இடையையும் உடைய மலைவாழ்கானவர் பெற்ற மகளாகிய இவள் (தலைவி) எனக்கு காம நோய்க்கு மருந்தெனின் மருந்தாவாள் இன்பத்துக்குச் சேமநிதி எனின் சேமநிதியாவாள். |