ஒழியிசை யெச்ச முடிபு சூ. 38 | 271 |
ஆதி பெயரெச்சம் பெயரில் முடிவு பெறும். படித்த பையன்-படித்த பெயரெச்சம். நல்லபாட்டு-நல்ல-குறிப்புப் பெயரெச்சம். ஒழியிசையெச்ச முடிபு 428 | ஒழியிசை யெச்ச மொழியிசை முடிபின (38). | | | | (ஒழியிசை எச்சம் ஒழியிசை-முடிபின) |
ஆ. மொ. இல. The incomplete sense of ‘oliyisai’ is completed by what-has been left-out. பி. இ. நூ. இ. வி. 350 ஒழியிசை எச்சம் ஒழியிசை கோடலும் ............................................ இயல்பென மொழி. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே ஒழியிசை யெச்சம் உணர்த்துதல் நுதலிற்று. உரை : ஒழியிசை யெச்சமாவன மூன்று; அவை மன்னை ஒழியிசையும் தில்லை ஒழியிசையும் ஓகார ஒழியிசையும் என; அவை மூன்றும் ஒழியிசைப் பொருள் கொண்டு முடியும், எ-று. 1வ-று : கூரியதோர் வாள் மன். வாள் கோடிற்று இற்றது எனப் பின்னும் வாள் மேல் முடிபு சென்றது.
1. இவ்வுதாரணங்களின் விளக்கங்களால், ‘ஒழியிசை’ என்னும் சொற்பொருளும், அது உதாரணங்களில் பொருந்துமாறும் தெளிவாக இல்லை. மற்றையோர் உரையும் உதாரணமுமே பொருந்தும். |