ஒழியிசை யெச்ச முடிபு சூ. 38 | 273 |
உ-ம் : ‘கூரியதோர் வாள்மன் என்பது ‘திட்பம் இன்று’ என்பதனோடும், ‘வருகதில் அம்ம’ என்பது ‘வந்தால் இன்னது செய்வேன்’ என்பதனோடும் முடியும். 1ஆண்டுப் பொருண்மை முடிபு கூறினார்; ஈண்டுப் பொருண்மையை யுணர்த்தும் சொன்மை முடிபு கூறினார். 2‘கொளலோ கொண்டான்’ என்பது ‘கொண்டான்’ என்பதனோடு முடியும்; அது ‘கொண்டுய்யப் போமாறு அறிந்திலன்’ என்பதனோடு முடிந்தது எனின், ‘கொண்டான் என்பது வந்து முடியாக்கால் அப்பொருண்மை முடிபு தோன்றாமையுணர்க. வெள் இஃது ஒழியிசை யெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. இ-ள் : ஒழியிசையெச்சம் ஒழிந்து நின்ற பொருளாகிய எச்சத்தினைக் கொண்டு முடியும், எ-று. மன்னை ஒழியிசையும் தில்லை யொழியிசையும் ஓகார வொழியிசையும் என ஒழியிசை மூன்றாம்.
1. ஆண்டு - இடையியல் 4, 5 சூத்திரங்களில். மன், தில் என்பன ஒழியிசைப் பொருளில் வரும் என்பது கூறப்பட்டது. இங்கு ஒழியிசைப் பொருளில் வரும் சொல் எப்படி முடியும் என்பது கூறப்பட்டது. 2. ‘கூரியதோர்வாள்மன்’ என்பதில் ‘மன்’ என்பதற்கு முடிபு இல்லை. அதனால் அது திட்பமின்று என்பதை நோக்கியது. ‘வருகதில்’ என்பதில் ‘தில்’ என்பதற்கு முடிபு இல்லை. அதனால் அது ‘வந்தால் இன்னது செய்வல்’ என்பதை நோக்கியது. கொளலோ கொண்டான் என்பதில் ஓ என்பதற்கு முடிபு உண்டு. அது ‘கொண்டான்’ என்பது. இச்சொல்லின் மூலந்தான் ‘கொண்டுய்யப் போமாறு அறிந்திலன்’ என்னும் ஒழிந்த பொருளையறியமுடியும். ‘கொளலோ’ என நிறுத்தினால் அப்பொருளறிய முடியாது. அதனால் ஓகாரம் ஒழியிசைப் பொருள்தரினும் கொண்டான் என்பதையே தனக்கு முடிபாகவுடையதாயிற்று.-சிவ. |