உ-ம் : கூரியதோர் வாள்மன், வருகதில் லம்ம வெஞ்சேரி சேர, கொளலோ கொண்டான் என்னும் ஒழியிசை யெச்சம் முறையே திட்பமின்று, வந்தால் இன்னது செய்வல், கொண்டுய்யப் போமாறறிந்திலன் எனத் தத்தம் ஒழியிசைப் பொருள் கொண்டுமுடிந்தன. ஆதி ஒழியிசை யெச்சம் ஒழிந்த பொருள்தந்து நிற்கும். நல்ல சாப்பாடுமன்-இங்கு நல்லதன்று, நல்லாயிருக்கிறது எனக் குறிக்கிறது. பிச்சைக்கோ வந்தான் - ஓ திருடவந்தான் எனக் குறிக்கின்றது. எதிர்மறையெச்ச முடிபு 429 | எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடிபின. (39) | | | | எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின) |
ஆ. மொ. இல. The incomplete sense of negative particles is completed by negatives பி. இ. நூ. இ. வி. 350 எதிர்மறை எச்சம் எதிர்மறை கோடலும் ......................................................................... இயல்பென மொழிப. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோவவெனின், நிறுத்த முறையானே எதிர்மறை யெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. |