பக்கம் எண் :

276தொல்காப்பியம்-உரைவளம்

சேனா

இ-ள் : 1மாறுகோள் எச்சம் எனப்பட்ட ஏகார எதிர் மறையும் ஓகார எதிர் மறையும் உம்மை யெதிர் மறையும் ஆகிய எதிர்மறை யெச்சம் மூன்றும் எதிர்மறையான் முடியும், எ-று.

உ-ம் : யானே கொள்வேன், யானோ கள்வேன், வரலும் உரியன் என்னும் எதிர்மறை யெச்சம் முறையானே, கொள்ளேன், கள்ளேன், வாராமையும் உரியன் என்னும் எதிர் மறையான் முடிந்தவாறு கண்டு கொள்க.

தெய்

எதிர்மறை யெச்சம் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : எதிர்மறைப் பொருண்மையை எச்சமாக வுடையது அவ்வெதிர் மறையாற் பொருள் முடிவு பெறும், எ-று.

உ-ம் : இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
 கண்ணிறை நீர்கொண் டனள்       (குறள். 1313)

என்பதனுள், “மறுபிறப்புப் பிரிவேம் என நினைத்துக் கண்ணிறை நீர் கொண்டனள்” எனப் பொருளுரைக்க வேண்டுதலின், எதிர்மறை, எஞ்சிநின்றதன் எதிர்மறைப் பொருளோடு முடிந்தவாறு கண்டு கொள்க.

நச்

இஃது எதிர்மறை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.


1. உயிர்மயங்கியல் 73, 88.

1. இவ்வுதாரண விளக்கத்தைக் கொண்டு, எதிர்மறைஎச்சம் என்பது, “எதிர்மறைச்சொல் தனக்கு எதிர்மறைப் பொருளை எச்சமாக வுடையது ஆகும். அதாவது எதிர்மறை உடன்பாட்டை எச்சமாக உடையதாகும்” என்பது தெய்வச்சிலையார் கொள்கை என அறியலாம். ‘எஞ்சி நின்றதன் எதிர்மறை’ என்றது ‘மறுபிறப்பில் பிரிவேம்’ என்றதை. பிரியலம் என்பது எதிர்மறை; அதற்கு எதிர்மறை பிரிவேம் என்பது. சிவ.