எதிர்மறையெச்ச முடிபு சூ. 39 | 277 |
இ-ள் : எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின - மாறுகொள் எச்சம் என்ற ஏகாரமும் ஓகாரமும் உம்மையுமாகிய எதிர்மறை எச்சம் மூன்றும் எதிர்மறைப் பொருளை உணர்த்தும் சொல்லை முடிபாக வுடைய, எ-று. உ-ம் : யானே கொள்வேன், யானோ கொள்வேன், சாத்தன் வரலும் உரியன் என அவ்விடைச் சொற்களின் பின்னர் நின்ற சொற்கள் அவற்றை முடித்தலான் கொள்ளேன், கொள்ளேன், வாராமையும் உரியன் என்னும் பொருண்மை முடிபு தோன்றியவாறு காண்க. வெள் இஃது எதிர்மறை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. இ-ள் : மாறுகொள் எச்சம் எனப்பட்ட ஏகார எதிர்மறையும் ஓகார எதிர்மறையும் உம்மை எதிர் மறையும் ஆகிய எதிர்மறை எச்சம் மூன்றும் எதிர்மறைப் பொருளையுணர்த்தும் சொற்கொண்டு முடியும், எ-று. உ-ம் : யானே கொள்வேன், யானோ கள்வேன், வரலும் உரியன் என்னும் எதிர்மறை எச்சங்கள் முறையே கொள்ளேன். கள்ளேன், வாராமையும் உரியன் என எதிர்மறைச் சொற்கொண்டு முடிந்தன. ஆதி ஏ, ஓ, உம் எதிர்மறைப் பொருள் கொண்டு முடியும் அவனே செய்தானா - அல்ல - பிறர் செய்தார். அவனோ செய்தான் ” அவன் வந்தாலும் வருவான் - வாராமலும் இருப்பான். உம்மை யெச்ச முடிபு 430 | உம்மை யெச்ச மிருவிற் றானுந் | | தன்வினை யொன்றிய முடிபா கும்மே (40) | | | | (உம்மை எச்சம் இருவீற் றானும் தன்வினை ஒன்றிய முடிபு ஆகும்மே) |
|