ஆ. மொ. இல. The incomplete sense of ‘Um’ in the too endings ends in the same verbs பி. இ. நூ. இ. வி. 380 “உம்மை யெச்சம் இருவீற் றானும் தன்வினை ஒன்றிய முடிபா குதலும் .............................................. இயல்பென மொழிப” இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இது முறையானே உம்மை யெச்சத்திற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. உரை : உம்மை யெச்சம் என்பது எச்சவும்மையாயிற்று; இருவீற்றானும் என்றது தானும் தன்னால் தழுவப்பட்டதுமான இரண்டனையும் ஆயிற்று; அவை இரண்டும் ஒன்றிய வினையே கொண்டு முடியும், எ-று. வ-று : சாத்தனும் வந்தான் என்றக்கால், பின்னைக் கொற்றனும் வந்தான் என்றானும், கொற்றனும் வரும் என்ப தானும் 1ஒன்றிய வினையே கொண்டு முடிக என்பது. ‘சாத்தனும் வந்தான்’ என்றக்கால் கொற்றனும் போயினான்’ என்றுவிடின் அமையாது என்பதாம். சேனா இ-ள் : எஞ்சு பொருட் கிளவியும் அவ்வெஞ்சு பொருட்கிளவியான் முடிவதுமாகிய உம்மையெச்ச வேறுபா டிரண்டன் கண்ணும், தன்வினை யும்மையொடு தொடர்ந்த சொற்குப் பொருந்திய முடிபாம், எ-று.
1. ஒன்றிய வினை ஒரே தன்மையான வினை; வேறு வினையோ எதிர்மறையோ அல்ல. |