உம்மை யெச்ச முடிபு சூ. 40 | 279 |
என்றது, ‘எஞ்சு பொருட்கிளவி செஞ்சொல்லாயின்’ (சொல். 284) என்றதனால் உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வரும் எஞ்சுபொருட் கிளவி உம்மை யெச்சத்திற்கு முடிபாதல் எய்திற்று; என்னை? எல்லா வெச்சத்திற்கும் எஞ்சு பொருட் கிளவியே முடிபாகலின். இனி உம்மையொடு தொடர்ந்த சொல்லிரண்டற்கும் வினை யொன்றேயாகல் வேண்டும் எய்தாதது எய்துவித்தவாறு. ஒன்றற்காயதே ஏனையதற்கும் ஆகலிற் றன்வினையென்றார். உ-ம் : சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் என இரண்டும் ஒருவினை கொண்டவாறு கண்டுகொள்க. சாத்தனும் வந்தான் கொற்றனும் உண்டான் என வேறுபட்டவழி உம்மை யெச்சமும் எஞ்சு பொருட்கிளவியும் இயையாமை கண்டு கொள்க. அஃதேல், பைம்புதல் வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன நடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே (அகம். 2) என 1வினை வேறுபட்டுழியும் தம்முள் இயைந்தனவால் எனின், இணர் விரிதலும், ஊர்கோடலும் இரண்டும் மணஞ்செய் காலம் இதுவென் றுணர்த்துத லாகிய ஒரு பொருள் குறித்து நின்றமையான் அவை ஒரு வினைபாற்படும் என்பது. பிறவும் இவ்வாறு வருவன வறிந்து ஒருவினைப்பாற் படுக்க. 1எஞ்சுபொருட் கிளவி செஞ்சொலாயவழித் தன்வினை கோடல் ஈண்டடங்காமையின், அது, தன்னின முடித்தல் என்பதனாற் பெறப்படும்.
1. வேங்கை விரிதலையும் திங்கள் ஊர் கொள்ளலையும் கொண்டு வினை வேறுபட்டன. 1. ‘சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான்’ என்பதில் சாத்தன் என்பதுஉம் இல்லாமையின் செஞ்சொல் எனப்படும். கொற்றனும் என்பதன் உம்மையால் சாத்தன் எனும் செஞ்சொல் தழுவப்படும். அது ‘கொற்றன்’ வினையாகிய ‘வந்தான்’ என்பதையே தானும் கொண்டது. |