1‘குடாவடியுளியம்’ என்றவழிக் ‘குடா’ என்பது குடகத்தார் 2பிள்ளைகட்கு இட்டபெயர். ‘அந்தோ’ என்பது ‘ஐயோ’ என்பதற் கிட்ட பெயர். ‘யான் தற்கரைய வந்து’ என்றவழிக் கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருள் உணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் 3மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டு கொள்க. நச் இது திசைச்சொற்கு இலக்கணம் கூறுகின்றது. இ-ள் : திசைச் சொற்கிளவி- திசைச் சொல்லாகிய சொல், செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம் குறிப்பினவே- செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும் பன்னிரண்டையும் புறம் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும் தாம் தாம் குறித்த பொருளையே விளக்கும் தன்மையை யுடையன, எ-று. உம்மையை எச்சவும்மையாக்கிப் பொருள் உரைக்க. எனவே, இயற்சொற் போல எந்நிலத்தும் தம் பொருள் விளக்காவாயின. பன்னிரு நிலமாவன : பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலையமானாடு, அருவாநாடு, அருவா வடதலை எனத் தென்கீழ்பால் முதலாக வடகீழ் பால் ஈறாக எண்ணுக. இனிப் பன்னிரண்டையும் சூழ்ந்த பன்னிரண்டாவன : சிங்களமும், பழந்தீவும், கொல்லமும், கூபமும், கொங்கணமும், துளுவும், குடகமும், கருநடமும், கூடமும், வடுகும், தெலுங்கும், கலிங்கமும் ஆம். தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை என்பனவற்றைப் ‘பெற்றம்’ என்றும், குட்ட நாட்டார் தாயைத் ‘தள்ளை’
1. திருமுருகாற்றுப்படை 313. 2. பிள்ளைகள்-சிறுவர்கள் 3. மா-மாமரம். |