என்றும் நாயை ‘ஞெள்ளை’ என்றும், குட நாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்கா நாட்டார் வஞ்சரைக் ‘கையர்’ என்றும், சீதநாட்டார் ‘ஏடா’ என்பதனை ‘எலுவன்’ என்றும், தோழியை ‘இகுளை’ என்றும், தம்மாமி என்பதனைத் ‘தந்துவை’ என்றும், பூழி நாட்டார் நாயை ‘ஞமலி’ என்றும், சிறு குளத்தைப் ‘பாழி’ என்றும், அருவா நாட்டார் செய்யைச் ‘செறு’ என்றும், சிறுகுளத்தைக் ‘கேணி’ என்றும், அருவா வட தலையார் குறுணியைக் ‘குட்டை’ என்றும் வழங்குப. இனிச் சிங்களம் ‘அந்தோ’ என்பது. கருநடம் 1‘கரைய’ சிக்க, குளிர என்பன. வடுகு ‘செப்பு’ என்பது தெலுங்கு எருத்தைப் ‘பாண்டில்’ என்பது. துளு மாமரத்தைக் ‘கொக்கு’ என்பது. ஒழிந்தவற்றிக்கும் வந்தவழிக் காண்க. வெள் இது திசைச்சொற்கு இலக்கணம் கூறுகின்றது. இ-ள் : செந்தமிழ் வழக்கைப் பொருந்திய பன்னிரு நிலங்களிலும் அவ்வந்நிலத்து வாழ்வார்தம் குறிப்பினையே பொருளாகக் கொண்டு வழங்குவன திசைச்சொற்களாம், எ-று. வடவேங்கடம் தென்குமரி யிடைப்பட்ட தமிழகம் தொல்காப்பியனார் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்த தென்பது ‘செந்தமி்ழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்னும் இச்சூத்திரத் தொடராற் புலனாம்............ ஆதி பிற மொழிச் சொற்கள் தமிழில் வருவனவற்றைத் திசைச்சொல் என்பதேசாலும். ஏன்? அவை பிற திசைகளிலிருந்து வந்தவையாதலின் மோட்டார், விற்றர்கில்லோ, மீற்றர், பென்.
1. கரை - அழை, கூப்பிடு. சிக்க - சிறிய |