‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வரும்’ என்பதூஉம் ஒன்றிய முடிபாம், கொற்றனும் உண்டான்’ என்றால் ஒன்றிய முடிபாகா. எனவே, எச்சப் பொருட்கும் உம்மையை முடிபாகக் கூறாது அதனோடு தொடர்ந்த வினை முடிபாமாறு கூறவே, உள்நின்ற பொருள் முடிபு கூறாது சொல்முடிபு கூறுதலே ஆசிரியர் கருத்தாயிற்று. எனவே, முற்கூறிய வற்றிற்கும் சொல் முடிபே கூறினாராயிற்று. “வேங்கையும் நள்இணர் விரிந்தன நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே” (அகம்.2) என்பது. இணர் விரிதலும் ஊர்கோடலும் மணம் செய்யும் காலம் குறித்தலின் அவை ஒருவினையே யாம். இனி எஞ்சு பொருட்கிளவி செஞ்சொல் ஆயவழியும் தன்வினைகோடல் தன்னின முடித்தலால் கொள்க. அது ‘சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான், வரும் என்பதாகும். வெள் இது உம்மை யெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. இ-ள் : உம்மை யெச்சம் இரண்டு வேறுபாட்டின்கண்ணும் தன்வினையொடு பொருந்திய முடிபாகும், எ-று. இருவீறாவன எஞ்சு பொருட்கிளவியாய் வந்து முடிப்பதும் அதனால் முடிவதும் ஆகிம் உம்மையெச்ச வேறுபாடு இரண்டும். தன்வினையென்றது முடிவதும் முடிப்பதுமாகிய அவ்விரண்டு சொல்லின்கண்ணும் உடன்பாடாகியும் எதிர்மறையாகியும் வரும் ஒத்த வினைச் சொல்லினை. அச்சொல் உம்மைக் கேற்ற வினைச் சொல்லாதலின் தன் வினையாயிற்று. எனவே, உம்மையொடு தொடர்ந்த சொல் இரண்டற்கும் வினை யொன்றேயாதல் வேண்டும் என எய்தாதது எய்துவித்தவாறு. உ-ம் : சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் என இரண்டும் ஒருவினை கொண்டவாறு கண்டு கொள்க. |