பக்கம் எண் :

உம்மை யெச்ச முடிபு சூ. 40283

‘சாத்தனும் வந்தான் கொற்றனும் உண்டான்’ என வினைவேறுபட்டவழி உம்மை யெச்சமும் எஞ்சு பொருட்கிளவியும் இயையாமை காண்க.................... எதிர் மறையும்மை எதிர்மறை எச்சமாய் அடங்குதலின், ஈண்டு உம்மையெச்சம் என்றது எச்சவும்மையே யாம்.

ஆதி

1எச்சப் பொருள் பற்றிய உம், உடம்பாடு எதிர்மறை எனும் இருமுடிவினும் தன் வினையாகவே முடியும்.

தண்டித்தாலும் தண்டிப்பான்-தண்டியாமலும் விடுவான்-எதிர்மறை

தண்டியாது விட்டுவிடுவான்-தண்டித்தாலும் தண்டிப்பான்-உடன்பாடு.

உடன்பாடு எதிர்மறை இருவகையிலும் தன் வினையே நிலவுகிறது.

குறிப்பு : உரையாசிரியர்கள் இதனை எச்சவும்மையோடு வைத்து வேறு வேறு கூறுவார்கள்.

எச்சஉம்மை - காலமயக்கம்

431 தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை
 நிகழுங் காலமொடு வாராக் காலமு
மிறந்த காலமொடு வாராக் காலமு
மயங்குதல் வரையார் முறைநிலை யான       (41)
  
 (தன்மேல் செம்சொல் வரூஉங் காலை
நிகழும் காலமொடு வாராக் காலமும்
இறந்த காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறை நிலை யான)

1. இக் கருத்துப் புதுமையானதே.