ஆ. மொ. இல. If a word without ‘Um’ is followed by a word with ‘um’ the apperance of the future tense with present tense or with past tense is not prevented. பி. இ. நூ. இ. வி. 352. (தொல். சூத்திரமே) இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இஃது அவ்வெச்சவும்மையது மயக்கங் கூறுதல் நுதலிற்று. உரை : தன் என்பது எச்சவும்மை; செஞ்சொல் என்பது உம்மையில் சொல்; எச்சவும்மைச் சொல்லின்மேல் உம்மையில் சொல் வந்தக்கால் நிகழ்காலமும் எதிர்காலமும் மயங்கும்; இறந்த காலமும் எதிர் காலமும் மயங்கப்படும் முறையிலக்கணமாகலான், எ-று. வ-று : ‘கூழ் உண்ணாநின்றான் சோறும் உண்பன்’ என வரும். ‘கூழ் உண்ணா நின்றான்’ என்பது செஞ்சொல். ‘சோறும் உண்பன்’ என்னும் உம்மைச் சொல்லின்மேல் வந்தது. ‘உண்ணா நின்றான்’ என்னும் நிகழ்காலம் தன் நிகழ்காலமே கொள்ளாது ‘சோறும் உண்பன்’ எனும் எதிர்காலம் கொண்டமையின் வழுவாயிற்றாயினும் அமைக என்பது. இறந்தவும் எதிர்வும் மயங்குமாறு. ‘கூழ் உண்டான் சோறும் உண்பான்’ என வரும். இனி ‘முறை நிலையான்’ என்றதனான், இறந்ததனோடு நிகழாநின்றதூஉம் மயங்கும், எதிர்வதனோடு இறந்ததுவும் மயங்கும் என்றவாறு. |