பக்கம் எண் :

286தொல்காப்பியம்-உரைவளம்

உ-ம் : சாத்தன் வாராநின்றான், கொற்றன் வருவன்போம். சாத்தன் வந்தான், கொற்றன் வருவன் போம், என இவை உம்மை கொடாமற் பொருள் பட்டவாறும், காலமுந்தொழிலும் மயங்கியவாறும் கண்டு கொள்க.

அஃதேல் ‘சாத்தனும் வாரா நின்றான் கொற்றனும் வருவன்’ என உம்மை கொடுத்தும் வழக்கு நிகழுமால் எனின், உம்மை கொடுக்கின்றது பொருள் வேற்றுமை உணர்தற்கன்றே? அது கொடாக்காலும் பொருள் இனிது விளங்குமாயின் கொடுத்ததனாற் பயனின்றென்க. இவ்வாறு செய்யுளகத்துவரின் இசை நிறைத்தற்பொருட்டு வந்ததென்க.

நச்

இதுவும் அவ்வெச்சவும்மையது காலமயக்கம் கூறுகின்றது.

இ-ள் : தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை-அவ்வும்மை யெச்சத்தின் முன்னர் முடிக்கும் சொல் உம்மைஇல் சொல்லாய் வருங்காலத்து, நிகழும் காலமொடு வாராக்காலமும்-நிகழ்காலத்தொடு எதிர்காலமும், இறந்த காலமொடு வாராக் காலமும், இறந்த காலத்தோடு எதிர்காலமும், மயங்குதல் வரையார் முறைநிலை யான-மயங்குதலை நீக்கார் அவ்வாறு மயங்கும் முறைமைக்கண், எ-று.

உ-ம் :கூழ் உண்ணா நின்றான் சோறும் உண்பன்.
  கூழ் உண்டான் சோறும் உண்பன்.

எனவரும். ‘முறைநிலை’ என்றதனால் சிறுபான்மை நிகழ்வோடு இறப்பும் மயங்குதல் கொள்க.

உ-ம் : கூழ் உண்ணா நின்றான் சோறும் உண்டான் எனவரும்.

வெள்

இதுவும் அவ்வெச்சவும்மையது காலமயக்கம் கூறுகின்றது.

இ-ள் : அவ்வும்மை யெச்சத்தின் முன்னர் முடிக்கும் சொல் உம்மையில்லாத சொல்லாய் வருங்காலத்து நிகழ்காலத்தொடு எதிர்காலமும் இறந்த காலத்தொடு எதிர்காலமும் முறையானே வந்து மயங்குதலை நீக்கார் ஆசிரியர், எ-று.