பக்கம் எண் :

எச்ச உம்மை-காலமயக்கம் சூ. 41287

முறைநிலையான என்றதனால் இங்குக் கூறிய முறையானன்றி நிகழ்காலம் முன் நிற்ப ஏனைக்காலம் பின்வந்து மயங்குதல் இல்லை என்பதாம்.

உ-ம் : ‘கூழுண்ணா நின்றான் சோறும் உண்பன்’ எனவும்’ ‘கூழுண்டான் சோறும் உண்பன்’ எனவும் நிகழ்காலத்தொடு எதிர்காலமும் இறந்த காலத்தொடு எதிர்காலமும் கூறிய முறையான் மயங்கி வந்தன. இவற்றொடு மயங்குதல் வரையார் எனவே, இறந்த காலத்தொடு நிகழ்காலமும் நிகழ்காலத்தொடு இறந்தகாலமும் வந்து மயங்குதல் நீக்கப்படும் என்றவாறாம்.

இங்குத் ‘தன்’ என்றது ‘சோறும் உண்பன்’ என வரும் உம்மை யெச்சத்தை. செஞ்சொல் என்றது ‘கூழ் உண்ணா நின்றான்’ என உம்மையில்லாது வரும் சொல்லினை.

உம்மை யெச்சத்தோடு தொடர்ந்த சொல்லிரண்டிற்கும் வினை ஒன்றேயாதல் வேண்டும் என மேலைச் சூத்திரத்தில் கூறினார். அங்ஙனம் கூறப்பட்ட வினைகாலம் வேறுபடுதலும் படாமையும் உடைமையான் இன்னவிடத்து இன்ன வகையானல்லது காலம் வேறுபடாது என இச்சூத்திரத்தான் வரையறை கூறினார்.

ஆதி

செஞ்சொல் என்பது உம் ஒட்டாத பெயர்
சோறும் உண்கிறான்-நிகழ்காலம்.

1சோறும் உண்கிறான்-பிறகு காப்பி குடிப்பான்-நிகழ்காலத்தோடு எதிர்காலம். காப்பி-செஞ்சொல்.

சோறு உண்டான்-இனிக்காப்பி குடிப்பான்-இறந்த காலத்தோடு எதிர்காலம். காப்பி செஞ்சொல்.

‘உம்’ முன்னர்ச் செஞ்சொல் வருமாயின் நிகழ்காலத்துடன் எதிர்காலமும் இறந்த காலத்துடன் எதிர்காலமும் கலந்து வருதல் கடியத் தக்கதன்று; இஃது நிலைத்த முறைமையே.


1. இவ்வாறு உலக வழக்கு இல்லை. சோறு உண்கிறான்-காப்பியும் குடிப்பான் என்பதே வழக்கு.