பக்கம் எண் :

288தொல்காப்பியம்-உரைவளம்

இவை நிகழ்காலத்தோடு நிகழ்காலமும் இறந்த காலத்தோடு இறந்த காலமும் எதிர்காலத்துடன் எதிர்காலமும் வருவதே சிறப்புடைத்து என அறிகிறோம்.

சோறும் உண்டான் பாலும் குடித்தான்
சோறும் உண்கிறான் பாலும் குடிக்கிறான்
சோறும் உண்பான் பாலும் குடிப்பான்

என்றமுறை மாறி வருமொழி ‘பால்’ எனச் செஞ்சொல் ஆகிறபோது காலம் மாறவும் இடமாகிறது.

என எச்ச முடிபு

432*எனவெ னெச்சம் வினையொடு முடிமே.       (42)
  
 (எனஎன் எச்சம் வுனையொடு முடிமே)

ஆ. மொ. இல.

The incomplete word ‘ena’ ends in verb.

பி. இ. நூ.

இ. வி. 350

எனவென் எச்சம் வினையொடு முடிதலும்
..............................................
இயல்பென மொழிப.

இளம்

இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே எனவென் எச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று.

உரை : எனவென நின்ற எச்சம் பெயர் கொண்டு முடியாது வினை கொண்டு முடியும், எ-று.

வ-று : ‘கொள்ளெனக் கொண்டான்’ என வரும். பிறவும் அன்ன.


* இடையியலில் (10) என என் எச்சம் ஆறு பொருளில் வரும் என்றார். இங்கு அவற்றில் எண்ணுப் பொருள் பெயர்ப் பொருள் இரண்டையும் விட்டு ஏனைய நான்குமே கொள்க. அதனால் வினையொடு முடியும் என்றது. பொரும்பான்மைபற்றி யென்க. ‘நிலனென நீரெனத்தீயென வளியென நான்கு’ என்பதில் ‘நான்கு’