பக்கம் எண் :

என எச்ச முடிபு சூ. 42289

தன் வினையையோ பிற வினையையோ எனின், இன்ன வினை யென்பதில்லை; ஏற்ற வினையான் முடியும் என்பது.

சேனா

இ-ள் : என வென்னும் எச்சம் வினை கொண்டு முடியும், எ-று.

உ-ம் : கொள்ளெனக் கொடுத்தான், துண்ணெனத் துடித்தது, ஒல்லென வொலித்தது, காரெனக் கறுத்தது எனவும்; 1நன்றென்று கொண்டான், தீதென்றிகழ்ந்தான் எனவும் வரும்.

தெய்

1எனவென் எச்சமுடிபு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : என வென்று சொல்லப்பட்ட எச்சம் வினையொடு முடியும், எ-று- உம்மையாற் பெயரொடும் முடியும் என்று கொள்க. முடிதலாவது அவற்றைச் சார்ந்து நின்று பொருளை யுணர்த்துதல். முடிதல் எனினும் தொடர்தல் எனினும் ஒக்கும்.

உ-ம் :* வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமால் இந்நின்ற
 வாடல் முதியாள் வயிற்றிடம் - கூடார்
பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
இரும்புலி சேர்ந்த இடம்       (பு. வெ. மாலை. வஞ்சிப். 19)

* எனும் பெயரைக் கொண்டு முடிந்தது காண்க.

1 எனவின் பொருளே என்று என்பதற்கும் ஆதலின் இவ்வுதாரணங்களைக் காட்டினார்.

1. என என்னும் சொல் எஞ்சி (மறைந்து) நிற்பது என எச்சம் என்பது தெய்வச்சிலையார் கொள்கை.

* பொருள் : இங்கே நின்ற வாடிய மூதாட்டியின் வயிற்றிடமே, பகைவரது வெள்ளம் போலும் பெரியபடை வந்து நெருக்கவும் சிறிதும் பின்னிடாத பெரிய புலிபோலும் வீரன் தங்கியிருந்த இடம் என வீடுணர்ந்த முனிவர்க்கும் வியப்பாகும்.