பக்கம் எண் :

290தொல்காப்பியம்-உரைவளம்

என்பதனுள் ‘இரும்புலி சேர்ந்த இடம் என வியப்பாமால்’ எனப் பொருளுரைக்க வேண்டுதலின் ‘என’ என்பது எஞ்சி நின்று ‘வியப்பு’ என்பதனோடு தொடர்ந்தது. இது வினை.

பிரிநிலை வினையே (எச்ச. 31) என்னுஞ் சூத்திரத்துள் ‘குறிப்பேயிசையே ஆயீரைந்தும்’ என்றவழிக் ‘குறிப்பே இசையே என அவ்வீரைந்தும் எனப் பொருளுரைக்க வேண்டுதலின் ‘என’ என்பது எஞ்சி நின்றது. ஈரைந்து என்னும் பெயரொடு முடிந்தது.

நச்

இது எனவென் எச்சம் ஆமாறு கூறுகின்றது.

இ-ள் : என என்எச்சம்-முன்னர் வினையும் குறிப்பும் இசையும் பண்பும் எனக் கூறிய நால்வகையவாகிய எனவென் எச்சம், வினையொடு முடிமே-தெரிநிலை வினையோடும் குறிப்பு வினையோடு முடியும், எ-று.

‘செய்தென’ என்னும் 1வினையெச்ச என, வினைகோடல் முற்கூறினார் (வினை. 31) 2 எண் எனவும் பெயர் எனவும் வினை கொள்ளா எனவே, என என்னும் இடைச்சொல் ஏழு வகையது ஆயிற்று.


1. வினை யெச்ச என - வினை யெச்சம் சார்ந்து வரும் என ‘மழை பெய்து மரம் வளர்ந்தது’ என்பது, ‘மழை பெய் தென மரம் வளர்ந்தது’ என்று வரும் போது என என்பது தனிப்பொருளுடையதன்றிச் செய்து என்வாய் பாட்டு எச்சத்தைச் சார்ந்து வந்தது. அதனால் என என்பது வினை, குறிப்பு, இசை பண்பு, எண், பெயர் என்னும் ஆறுபொருளுடன் (இடையியல். 10) செய்தேன் எச்சப்பொருள் ஒன்றும் சேர்ந்து ஏழுபொருளில் வருவதாயிற்று.

2. எண்ணுப் பொருளில் வரும் எனவும், பெயர்ப் பொருளில் வரும் எனவுப் வினைமுடிபு கொள்ளா. நிலனென நீரெனத் தீயென வளியெனப் பூதம் நான்கு அழுக்காறு என பெயர் ஒருபாவி-கொண்டமை காண்க.