பக்கம் எண் :

என எச்ச முடிபு சூ. 42291

உ-ம் : கார் வருமனெக் கருதி நொந்தாள்
 துண்ணெனத் துடித்தது.
 ஒல்லென வொலித்தது
 காரெனக் கறுத்தது.

என நான்கனுள் இருவகை வினையும் காண்க.

என்று என்பதற்கும் இவ்விதி ஒக்கும்,

கொள்ளென்று கொண்டான்
மலைவான் கொள்ளென்று உயர்பலி தூஉய்       (புறம். 143)

என்பன கொள்ளென்று சொல்லிக் கொண்டான் எனவும், ‘மலை வான் கொள்ள வேண்டும் என்று சொல்லி’ எனவும் பொருள் தருதலின் சொல் லெச்சமாம்.

வெள்

இது என வென் எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள் : என என்னும் எச்சம் வினை கொண்டு முடியும், எ-று.

உ-ம் : கொள்ளெனக் கொடுத்தான் துண்ணெனத் துடித்தது, ஒல்லென வொலித்தது, காரெனக் கறுத்தது எனவரும் என்று என்னும் எச்சச் சொல்லின் முடிவும் பொருளும் என என்பதனோடு ஒத்தலான் அதனை எனவென் எச்சத்தில் அடக்கினார் ஆசிரியர் எனக் கருதுவர் சேனாவரையர்.

உ-ம் : நன்றென்று கொண்டான், தீ தென்றிகழ்ந்தான் எனவரும்.

ஆதி

எனஎன்னும் எச்சம் வினையைக் கொண்டு முடியும் படிஎனச் சொன்னார்.

ஏனை யெச்சங்களின் முடிபு

433. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு
 மெஞ்சு பொருட் கிளவி இலவென மொழிப       (43)
  
 (எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும்
எஞ்சு பொருள் கிளவி இலஎன மொழிப)