பக்கம் எண் :

292தொல்காப்பியம்-உரைவளம்

ஆ. மொ. இல.

The remaining Three have no words to complete.

பி. இ. நூ.

இ. வி. 350.

எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும்
எஞ்சுபொருட் கிளவி யிலவாய்..................................

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் ஒழிந்து நின்ற எச்சங்கள் திறத்துப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

உரை : எஞ்சிய மூன்றும் என்பன 1அவை மூன்றும்; முந்தையவற்றைப் போலத் தம்மை யின்னவாறு முடிப்பன என்று காட்டப்படும் எச்சச்சொல் இல்லை, எ-று.

‘மூன்றும் மேல் வந்து முடிக்கும் எச்சச்சொல் இல’ என ஒன்று உடைத்து என்பதாம். அஃதியாதோ வெனின் சொல்லெச்சம்; அதனை முன்னர்ச் சொல்லுதும்.

சேனா

இ-ள் : சொல்லப்பட்டன வொழிந்து நின்ற சொல்லும் குறிப்பும் இசையுமாகிய எச்சம் மூன்றும் மேல் வந்து தம்மை முடிக்கும் எஞ்சு பொருட் கிளவியையுடைய வல்ல வென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று.

என்றது, அவ்வத் தொடர்க்குத் தாம் எச்சமாய் வந்து அவற்றதவாய் நிலையை நீக்கலின், பிரிநிலையெச்சம் முதலாயின போலத் தன்மை முடிக்கும் பிற சொல்லைத் தாம் அவாய்நில்லா என்றவாறு. அவை பிற சொல் அவாவாது தாம் எச்சமாய் வருமாறு முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும்.


1. அவை-சொல், குறிப்பு, இசை எச்சங்கள்.