பக்கம் எண் :

ஏனை யெச்சங்களின் முடிபு சூ. 43293

தெய்

சொல்லெச்சத்திற்கும் குறிப்பெச்சத்திற்கும் இசையெச்சத்திற்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : மேல் அதிகரிக்கப்பட்ட பத்தினுள்ளும் முடிவு சொல்லாது ஒழிந்த மூன்று சொல்லும் வந்து முடிக்கும் சொற்களை எஞ்சி நிற்றலில், எ-று.

எனவே, முந்துற்ற ஏழு சொல்லும் வந்து முடிக்கும் சொற்களையுடைய என்பதூஉம், இவை நின்றவற்றாற் பொருள் வேறுபடூஉம் என்பதூஉம் கூறியவாறாம் என்றவாறு. இதன் பொருள் வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

நச்

இஃது ஏனை எச்சங்கட்கு முடிபு வேற்றுமை கூறுகின்றது.

இ-ள் : எஞ்சிய மூன்றும்-ஒழிந்த சொல்லெச்சமும் குறிப்பு எச்சமும் இசையெச்சமுமாகிய மூன்றும், மேல்வந்து முடிக்கும் எஞ்சு பொருட் கிளவி இல என மொழிப-ஒழிந்த எச்சங்கள் போலத் தமக்குமேல் வேறாய் வந்து தம்மை முடிக்கும் எஞ்சிய பொருட் கிளவியை உடைய அல்ல என்று கூறுவர் ஆசிரியர், எ-று.

எனவே, பிறசொல்லை அவாவி நின்றாலும், அவை வந்து முடியாமல், தாமே அவற்றைக் கூறி நிற்குமாயின. அவை மேல் காட்டுதும்.

சொல்லை எச்சமாகவுடைய சொல் எனவும், குறிப்பின்கண் தோன்றிய எச்சம் எனவும், இசையின்கண் தோன்றிய எச்சம் எனவும் விரிக்க.

வெள்

இஃது ஏனை யெச்சங்கட்கு முடிபு வேற்றுமை கூறுகின்றது.

இ-ள் : முற்குறித்த பத்து எச்சங்களுள் கூறப்படாது எஞ்சியுள்ள சொல்லெச்சம் குறிப்பெச்சம் இசையெச்சம் ஆகிய