பக்கம் எண் :

294தொல்காப்பியம்-உரைவளம்

மூன்றும் மேல் வந்து தம்மை முடிக்கும் எஞ்சு பொருட்கிளவியை உடையனவல்ல என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று.

என்றது அவ்வத் தொடர்க்குத் தாம் எச்சமாய் வந்து அவற்றது அவாய் நிலையை நீக்குதலின் முற்கூறிய பிரிநிலையெச்சம் முதலாயின போலத் தன்மை முடித்தற்குப் பிற சொல்லை அவாவி நில்லா என்பதாம்.

ஆதி

பத்துவகை யெச்சங்களில் இங்குக் கூறப்படாது எஞ்சி நின்ற சொல் குறிப்பு இசை எச்சங்கள் மூன்றும் தம்மோடு பிற ஒன்றைக் கொண்டு முடிவன வல்ல;

434.*அவைதாந்
 தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும்.      (44)
  
 (அவைதாம்
தம் தம் குறிப்பின் எச்சம் செப்பும்).

ஆ. மொ. இல.

Those (three) complete the sense by the context.

பி. இ. நூ.

இ. வி. 350.

அவைதாம்
தத்தம் குறிப்பின் எச்சம் செப்பலும்
இயல் பென மொழிப இயல்புணர்ந் தோரே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இது, ‘குறிப்பே இசையே’ (எச்ச. 34) என்று கூறப்பட்ட இரண்டெச்சமும் தங்குறிப்பிற் பற்றிய எச்சத்தானே முடிபு கூறப்படும்; பிறிதில்லை என்பது.

வ-று : விண்ணென விசைத்தது-குறிப்பெச்சம்; அது தன் குறிப்பினையே கொண்டு முடிந்தது. விண்என்றதே விசைத்தது.


* அவைதாம் என்பது நச். பாடத்தில் இல்லை.