2அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு (குறள். 1) அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளிந்த சொல் தேறியார்க் குண்டோ தவறு (குறள். 1154) என்றவழி முறையானே ‘அதுபோல’ எனவும் ‘நீத்தார்க்கே தவறு’ எனவும் வருவன எஞ்சிய இசைப்பொருள் உணர்த்தலான் இசையெச்சம் ஆயின. சொல்லெச்சத்திற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். ‘சொல்லளவல்லது எஞ்சுதல் இன்றே’ (சொல்.111) என்பதனான் அஃதொரு சொல்லாதல் பெறப்படுதலின் இது தொடர்ச்சொல்லாம் என்பது. ‘சொல்’ என்னும் சொல் எஞ்சுவது சொல்லெச்சம் 1என்பர் இவ்விருவகையும் இசையெச்சம் என அடக்குப. *‘பசப்பித்துச் சென்றாரையாமுடையேம்’ என்னுந்தொடக்கத்தன குறிப்பிற் றோன்றலாய் அடங்குதலின், விண்ணென விசைத்தது என்பது குறிப்பெச்சம் என்றும், அதுபோல என்னுந் தொடக்கத்தன விகார வகையாற்றொக்கு நின்றமையான், ஒல்லென ஒலித்தது என்பது இசையெச்சமென்றும், இவை தத்தம் சொல்லான் முடிதலல்லது பிற சொல்லால் முடியாமையின் இவற்றை மேல் வந்து முடிக்கும் எஞ்சு பொருட்கிளவியில
2. பொருள்:“எழுத்துக்களெல்லாம் அகரமாகிய முதலையுடையன; அதுபோல உலகம் ஆதிபகவனாகிய முதலையுடைத்து” “எதிர்ப்பட்ட ஞான்றே தலையனி செய்து நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவராயின் அவர்க்கன்றி அவர் அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றமுண்டோ”-பரிமேலழகர். 1. என்பார் யார் எனத்தெரியவில்லை. * இப்பகுதிக்கும் பின்வரும் பகுதிக்கும் சுந்தர மூர்த்தி விளக்கம் சிறப்புடையது. அதனைச்சூத்திரவுரை முடிவில் காண்க. |