ஏனை யெச்சங்களின் முடிபு சூ. 44 | 297 |
என்றார் என்றும் உரைத்தாரால் எரையாசிரியர் எனின், அற்றன்று; ‘தெரிபு வேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் (சொல். 157) எனச்சொற்பொருட் பாகுபாடுணர்த்தினார். குறிப்பிற்றோன்றும் பொருளை வெளிப்படுத்தும் எச்சமாதலுடைமையான் எச்சம் என்றார்; அதனான் ஆண்டடங்காது. இனி விசைத்தது ஒலித்தது என்பன தஞ்சொல் எனப்படா; படினும் விண்ணெ வீங்கிற்று, துண்ணெனத் துலங்கினான் எனவும், ஒல்லென வீழ்ந்தது எனவும் பிறசொல்லானும் முடிதலின் எஞ்சு பொருட்கிளவியில் என்றல் பொருந்தாதாம். என்னை? தம் சொல் அல்லாதன எஞ்சு பொருட்கிளவியா மாகலின். இனி அதுபோல என்பது தொக்குக்கும் வழித் தொகுத்தல் என்பதனாற் றொக்கதாயின் அதனைச் சுட்டிக்கூறாவுவமம் என அணியியலுள் ஆசிரியர் ஓர் உவமை வேறுபாடாகக் கூறல் பொருந்தாது. தொகுக்கும் வழித் தொகுத்தல் ஒருமொழிக் கண்ணதாகலிற் பலசொல் தொகும் என்றலும் பொருத்தமின்று. அதனான் அவர்க்கது கருத்தன்று. விண்ணென விசைத்தது ஒல்லென வொலித்து என்னுந் தொடக்கத்தனவற்றை எனவெனெச்சம் என அடக்கிக் குறிப்பெச்சத்திற்கும் இசையெச்சத்திற்கும் வேறுதாரணங் காட்டல் கருத்தென்க. அல்லதூஉம் எனவென் எச்சமென அடக்காது இசையும் குறிப்பும் பற்றி வருவனவற்றை வேறொதின், வெள்ளென வெளுத்தது எனப் பண்பு பற்றி வருவதனையும் வேறு ஓதல் வேண்டும்; அதனை வேறு ஓதாமையானும் எனவென் எச்சம் என அடக்குதலே கருத்தாகக் கொள்க. குறிப்புப் பொருளைப் பசப்பித்துச் சென்றார் உடையையோ’ ‘இளைதாக முள்மரம் கொல்க’ என்பன முதலாகிய தொடர்மொழியே உணர்த்தலான் எஞ்சு பொருள் எனப்படாவாயினும் அப்பொருள் பிறசொல்லானல்லது வெளிப்படாமையின் அச்சொல் எச்சமாயிற்று. குறிப்புப் பொருளேயன்றி எஞ்சு பொருளும் சொல்லுவான் குறிப்பொடுபடுத்து உணர்ந்து தமக்கேற்ற சொல்லால் உணர்த்தப்படுதலின் குறிப்பான் எச்சஞ்செப்பல் மூன்றற்கும் ஒத்தவாறறிக. |