பக்கம் எண் :

ஏனை யெச்சங்களின் முடிபு சூ. 44299

இனிச் சேனாவரையர் குறிப்பெச்சத்திற்கு ‘இளைதாக முன் மரம் கொல்க’ என்னும் குறள்வெண்பாவும், இசையெச்சத்திற்கு ‘அகரமுதல’ என்னும் குறள்வெண்பாவும் காட்டினாரால் எனின், அவர் காட்டின குறிப்பெச்சம் செய்யுள் இலக்கணம் கூறுகின்ற செய்யுளியற் ‘சொல்லொடும் குறிப்பொடும்’ (செய். 206) என்னும் சூத்திரத்தால் பல சொல் தொடர்ந்ததோர் செய்யுள் முடிந்தக்கால் வரும் என்று கொண்ட குறிப்பெச்சமாகலின், அதனைச் சொல்லிலக்கணத்தில் கூறுகின்ற குறிப்பெச்சத்திற்குக் காட்டினால் ஆண்டைக் குறிப்பெச்சத்திற்கு வேறுபொருள் இன்றாம் ஆகலானும், அவர் இசையெச்சம் என்ற ‘அகரமுதல’ என்பதன்கண் ‘அதுபோல’ என விரிந்த உவமச்சொல் துணியுமாறு விரியாது, இரண்டற்கும் பொதுவாய் வேறுபட வந்த உவமத்தின்பாற் படுத்தல் அல்லது இசையால் பிறவாமையானும் அவை பொருந்தாமையுணர்க.

வெள்

இ-ள் : அவ்வெச்சம் மூன்றும் சொல்லுவார் குறிப்பினால் எஞ்சி நின்ற பொருளை யுணர்த்தும், எ-று.

உ-ம் : பசப்பித்துச் சென்றார் உடையையோ அன்ன நிறத்தையோ பீரமலர்.

என்புழி ‘பசப்பித்துச் சென்றாரையா முடையேம்’ என்வந்த தொடர்மொழி எச்சமாய் நின்று குறிப்புப் பொருளை வெளிப்படுத்தலாற் குறிப்பெச்சமாயிற்று.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளிந்தசொல்
தேறியார்க் குண்டோதவறு.

என்றவழி ‘நீத்தார்க்கேதவறு’ என எஞ்சிய பொருள் உணர்த்தலான் இசையெச்சமாயிற்று.

சொல்லெச்சத்திற்கு காரணம் அடுத்த சூத்திரத்திற் காட்டப்படும். ஒரு சொல்லளவில் எஞ்சி நிற்பது சொல்லெச்சம் என அடுத்த சூத்திரத்திற் கூறப்படுதலின் இசையெச்சம் என்பது தொடர்ச்சொல்லாய் எஞ்சுவது என்பது பெறப்படும். சொல் என்னும் சொல் எஞ்சுவதே சொல்லெச்சம் என்போர், ஒரு சொல் எஞ்சுதலும் ஆகிய தொடர்சொல் எஞ்சுதலும் இருவகையினையும் இசையெச்சம்என அடக்குவர்.