ஆதி சொல், குறிப்பு, இசை எச்சங்கள் மூன்றும் சொல்லும் குறிப்பு முறையால் எஞ்சிநின்ற பொருளை யுணர்த்தும், ‘ஆமாம், நான்தான் முழுவதையும் சாப்பிட்டுவிட்டேன்’ இது. ‘யான் அல்லன எல்லாருந்தாம்’ எனப் பொருள் தருவதால் சொல் எச்சம். ‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிற்று - இது குறிப்பாகச் சுட்டுவதால் குறிப்பெச்சம். ஓகை ஓகை, சரிசரி, அதுசரி-இவை நன்று எனப் பாராட்டுவதால் இசையாம். கு. சுந்தரமூர்த்தி (உரையாசிரியர்க்கு மறுப்புப் பகுதி) (சொல்லெச்சம் யாதானும் ஒரு சொல் எஞ்சி நிற்பது இசையெச்சம் ஒருதொடர் எஞ்சி நிற்பது குறிப்பெச்சம் ஒரு தொடர்மொழி (வாக்கியம்) எஞ்சி நிற்பது) “குறிப்பெச்சத்திற்கு ‘விண்ணென விசைத்தது’ என்ற தொடரையும், இசையெச்சத்திற்கு ‘ஒல்லென வொலித்தது’ என்ற தொடரையும் உதாரணம் காட்டினர் இளம்பூரணர். சேனாவரையர் இக்கருத்தை மறுக்குங்கால் ஒரு புதிய முறையைக் கையாளுகிறார். தாம் காட்டிய உதாரணத்தை இளம்பூரணர் காட்ட நினையாமைக்குரிய காரணத்தைத் தாமே கண்டு, அதற்கு முதற்கண் மறுப்புரை வழங்குவர். அடுத்து அவர் காட்டிய உதாரணங்கள் பொருந்தாமைக்கு மறுப்புரை வழங்குவர். இவ்விருதிறமாக அவர் மறுப்புரை சொல்லுகின்றது. 1) ‘இளைதாக முள்மரம் கொள்க’ என்ற குறட்பா குறிப்பிற்றோன்றலாய் அடங்குதலின் அது குறிப்பெச்சமாகாது. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற குறட்பாவில் அதுபோல என்ற சொல் எஞ்சி நிற்பது தொகுக்கும் வழித் தொகுத்தலாய் அடங்குதலின் அது இசையெச்சத்துக்கு உதாரணம் ஆகாது. ஆதலின் மேற்காட்டிய இரு உதாரணங்களும் ஈண்டுக் காட்டற்குப் பொருத்தம் இல்லை என இளம்பூரணர் கருதியதாக நினைந்து அதனைச் சேனாவரையர் மறுக்குமாறு :- |