ஏனை யெச்சங்களின் முடிபு சூ. 44 | 301 |
சொல் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பொருள் உணர்த்தும் முறையில் ‘இளைதாத முள் மரம் கொல்க’ என்னுந் திருக்குறள் குறிப்பில் தோன்றற்கு உதாரணம் ஆகுமேனும், அக்குறிப்புப் பொருளை உணர்த்தும் எச்சமாதற் பொருண்மையுடைமையின் அதுபற்றி இவ்விடத்தும் உதாரணம் காட்டுதல் இழுக்கில்லை. இனி அகரமுதல என்னும் திருக்குறளில் ‘அதுபோல’ என்ற தொடர் மறைந்து வருவது தொகுக்கும் வழித் தொகுத்தலாயின், அதனையே சுட்டிக் கூறாவுவமம் எனப் பின்னர் உவமவியலிற் கூறுதற்குக் காரணம் இல்லை. (இக்குறளைச் சுட்டிக் கூறாவுவமத்துக்கு உதாரணம் காட்டுவர் இளம்பூரணர்). அன்றியும் தொகுக்கும் வழித் தொகுத்தல் என்பது ஒரு சொல்லே தொகுவதாகும். ஈண்டு ‘அதுபோல’ என்பதோ ஒரு தொடராகும். இதனானும் இது தொகுக்கும் வழித் தொகுத்தல் அன்றாம் என்பர். 2) இனி இளம்பூரணர் இவற்றிற்குக் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள் பொருந்தாமையைக் காண்போம். இளம்பூரணர் குறிப்பெச்சத்திற்கு ‘விண்ணெண விசைத்தது’ என்பதையும், இசையெச்சத்திற்கு ‘ஒல்லென ஒலித்தது’ என்பதையும் காட்டி, இவைதத்தம் சொல்லான் முடிதலின் மேல்வந்து முடிக்கும் எஞ்சு பொருட்கிளவியில்லை என்றும் கூறினர். ‘காற்று விண்ணென விசைத்தது’ என்புழி விண் என்ற குறிப்பையே ‘விசைத்தது’ என்பது உணர்த்துகின்றது ‘கடல் ஒல்லென ஒலித்தது’ என்புழி ஒல்லனெ்ற இசையையே ‘ஒலித்தது’ என்பது உணர்த்துகின்றது. எனவே, விண்ணெனலும் விசைத்தலும், ஒல்லெனலும் ஒலித்தலும் ஒன்றாதலின் தத்தம் சொற்கொண்டே முடிந்தது என்றார் இளம்பூரணர். இவைதத்தம் சொல்லால் முடிந்தது என்பதற்கு இளம்பூரணர் கருதிய பொருள் இதுவாகச், சேனாவரையர் வேறு விதமாகப் பொருள் கொண்டு அதுவே இளம்பூரணர் கருத்தாக நினைத்து மறுப்பு வழங்குகிற்ார் அம்மறுப்பு வருமாறு :- (அ) விண்ணென விசைத்தது, ஒல்லென வொலித்தது என்வற்றில் விசைத்தது, ஒலித்தது என்பன முறையே விண் என்பதற்கும் ஒல் என்பதற்கும் உரிய சொற்கள் அல்ல. (ஆ) அங்ஙனம் உரிய சொற்களாயினும், ‘விண்ணென வீங்கிற்று’ ஒல்லென |