வீழ்ந்தது’ எனப்பிற சொல்லானும் அச்சொற்கள் முடியுமாகலின் அவை, மேல்வந்து முடிக்கும் எஞ்சுபொருட்கிளவியில என்றலும் பொருந்தாதாம். (இ) அன்றியும், விசைத்தது, ஒலித்தது என்பவற்றை முறையே குறிப்பெச்சமாகவும் இசையெச்சமாகவும் கொள்ளின் ‘வெள்ளென வெளுத்தது’ எனப் பண்புபற்றி வருவதையும் பண்பெச்சம் என வேறாறக் கூறவேண்டும் அங்ஙனம் கூறாமையின் அது பொருந்தாது. எனவே இளம்பூரணர் காட்டிய இரு உதாரணங்களையும் எனவென் எச்சத்தில் அடக்குதலே பொருந்தும். ‘பசப்பித்துச் சென்றாரை யுடையையோ’ ‘இளைதாக முள் மரம் கொல்க’ என்னுந் தொடர்களே தத்தம் குறிப்பிற் பொருளையுணர்த்துவனவா யிருத்தலின், இவற்றிற்கு எஞ்சு பொருள் உணர்த்தும் தொடர்மொழி வேண்டா எனின், அற்றன்று; இச்செய்யுள்கட்குரிய குறிப்புப்பொருள்களை அத்தொடர்மொழிகளே வந்து விளக்க வேண்டும் ஆதலானும், அத்தொடர் மொழிகளே எச்சமாக வரும் என ஈண்டுக் கூறலானும் இவை எஞ்சு பொருட்கிளவியுடையன என்று கூறலே அமையும் என்க. இம்மூவகை யெச்சங்களுள் குறிப்பெச்சம் நீங்கலாக ஏனையிரண்டும் இசையெச்சம் என்றும் செல்லெச்சம் என்றும் பெயர்பெறினும், அவ்வவ்வெச்சச் சொற்களும் குறிப்பாகவே பெறப்படுதலின் குறிப்பான் எச்சம் செப்பல் இம்மூன்றற்கும் உரியதாயிற்று”. சொல்லெச்ச முடிபு 435 | சொல்லெ னெச்ச முன்னும் பின்னுஞ் | | சொல்லள வல்ல தெஞ்சுத லிலவே (45) | | | | (சொல் என் எச்சம் முன்னும் பின்னும் சொல் அளவு அல்லது எஞ்சுதல் இலவே.) |
ஆ. மொ. இல. The incomplete form known as ‘Sol’ is completed only by adding a word either before or after. |