பக்கம் எண் :

சொல்லெச்ச முடிபு சூ. 45303

பி. இ. நூ.

இ. வி. 351.(தொல் சூத்திரமே)

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், சொல்லெச்சத்திற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

உரை : சொல்லென் எச்சம் 1முன்னாயினும் பின்னாயினும் சொல் என்னும் சொற் கொண்டு முடிதவல்லது பிறிதில்லை, எ-று.

வ-று : 2‘பசித்தேன் பழஞ்சோறு தா என நின்றான்’ என்பதாம்.

மற்றுத் தாஎன நின்றான் பிறனேயெனின், தாஎனச் சொல்லி நின்றான் என்பதாம். அவற்றுட் ‘சொல்லி’ என்றானும் ‘சொல்ல’ என்றானும் ஆக இரண்டனுள் ஒன்றனான் முடியும் அது என்பது.


1. முன்னும் பின்னும் = சொல்லி அல்லது சொல்ல என்னும் சொல்லைக் கூட்டியுரைப்பதன் முன்னும் பின்னும். ‘தாஎன நின்றான்’ இதில் சொல்லி என்பது கூட்டப்படவில்லை. என்றாலும் என என்பது சொல்லி என்பதை நோக்கி நிற்றலின் சொல்லெச்சம். ‘தா எனச்சொல்லி நின்றான்’ இதில் சொல்லி என்பது கூட்டப்பட்டது. கூட்டிய பின்னும் என என்பது சொல்லெச்சமாம். என என்பது ‘சொல்’ என்பதை எஞ்சி நிற்றலின் அது (என) சொல்லெச்சமாம் என்பது இளம்பூரணர் கருத்து. இதை சேனாவரையர் மறுப்பர், பார்க்க.

2. ‘பசித்தேன்; பழஞ்சோறு தா என நின்றான்’ என்பது, பசித்தவனே பழஞ்சோறு தாஎன நின்றான் என்ற பொருளில் வந்ததாயின் தா எனச் சொல்லி எனவும், பசித்தவன் பழஞ்சோறு தா எனத் தன்னிடம் கேட்கப் பிறன் நின்றான் என்ற பொருளில் வந்ததாயின் ‘தா எனச் சொல்ல’ எனவும் பொருளுக்கேற்ப வருவித்துக் கொள்ளல் வேண்டும்.