பக்கம் எண் :

304தொல்காப்பியம்-உரைவளம்

முன்னும் என்றது. தா எனச் சொல்லி நின்றான் என்று கொணர்ந்து முடிப்பின் அது பின் முடிவுபட நின்றதாம் என்பது.

சேனா

இ-ள் : சொல்லெச்சம், ஒருசொற்கு முன்னும் பின்னும் சொல் மாத்திரம் எஞ்சுவதல்லது தொடராய் எஞ்சலின்று, எ-று.

உயர்திணை யென்மனார் (கிளவி-1) என்புழி ஆசிரியர் என்னுஞ்சொல் 1முன்னும், ‘மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே’ (குறுந். 71) என்புழி எமக்கென்னும் சொல் 2பின்னும் எஞ்சி நின்றவாறு கண்டு கொள்க.

3ஒரு சாரார் இவற்றை இசையெச்சம் என்று, ‘சொல்லளவல்லது எஞ்சுதலின்றே’ என்பதற்குச் சொல் என்னும் சொல்லளவல்லது பிறிதுசொல்

எஞ்சுதல் இன்று என்று பொருளுரைத்து, பசித்தேன் ‘பழஞ்சோறு தா என்று நின்றான்’ என்புழித் தா எனச் சொல்லி எனச் சொல் என்னும் சொல் எஞ்சி நின்றது என்று இதனை உதாரணமாகக் காட்டுப. அவர் முன்னும் பின்னும் என்பதற்குச் சொல் என்னும் சொற்கொணர்ந்து கூட்டுதன் முன்னும் பின்னும் என இடர்ப்பட்டு்ப் பொருளுரைப்ப.

தெய்

சொல்லெச்சம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : சொல் என்னும் எச்சம் அச் சொல்லாவதற்கு முன்னும் பின்னும் ‘மற்றொருசொல் எஞ்சி நிற்றல் இலது, எ-று.

எனவே, அச்சொல்லினானே உய்த்துணர்ந்து கொள்ளப் பிறிதொரு பொருள் வரும் என்றவாறாம்.


1. 2 இடமுன், இடப்பின் எனக் கொள்க.

3. இசையென்றார் யார் எனத் தெரிந்திலது. ஆனால் மறுப்பு இளம்பூரணருக்குரியது.

4. இது பிறிது மொழிதல் அணியாகும். உதாரணக் குறள்களில் பரிமேலழகர் பிறிது மொழிதல் அணியெனக் குறித்தல் காண்க.