பக்கம் எண் :

சொல்லெச்ச முடிபு சூ. 45305

உ-ம் : 5நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும்புனலின்
 நீங்கின் அதனைப் பிற.       (குறள் 495).

6காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு.       (குறள். 500)

என்றவழித் தமது நிலத்தில் எளியவரும் வலியராவர்; பிறர் நிலத்தில் வலியவரும் எளியராவர் என்னும் பொருண்மை இச்சொல்தானே யுணர்த்தலின் சொல் எச்சமாயிற்று.

*நச்

இது சொல் எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள் : என் எச்சம்-என் என்கின்ற எச்சமானது, சொல் அளவு அல்லது - சொல் என்னும் முதல் நிலை மாத்திரை தன்னுள்ளேயே எஞ்சி நிற்றல் அல்லது, சொல் முன்னும் பின்னும் எஞ்சுதல் இன்று செய்யுளியலிற் கூறும் சொல் எச்சம் போல ஒரு சொல் செய்யுட்கு முன்னும் பின்னும் எஞ்சி நிற்றல் இல்லை, எ-று.

‘என்’ என்னும் இடைச் சொற்கண்ணே ‘சொல்’ என்பது தோன்றுதலின், ‘என் எச்சம்’ என்றார். ‘என்’ என்பது சொல்லை ஒழிபாக நிற்றலின் முன்னர்ச் சொல்லெச்சம் என்றார். ‘வினையெனப்படுவது’ (வினை. 1 ) என்றது, ‘வினை


5. பொருள் : முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவற்றையெல்லாம் தான் கொல்லா நிற்கும்; அப்புனலி னீங்குமாயின் அதனைப்பிற வெல்லாம் வெல்லா நிற்கும்-பரிமேலழகர்.

6. பொருள் : பாகர்க் கடங்காவுமாய் வேலாட்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை, அவை காலாழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரிகொல்லும்-பரிமேலழகர்.

* இவர் உரை விளக்கம்பற்றிப் பின்னர் வரும் சிவ. விளக்கத்திற் காண்க.