யென்று சொல்லப்படுவது’ என்று பொருள் தந்த இடத்து ‘என்’ என்னும் எச்சம் தான் அவாவுதலின், இடையே நின்ற ‘சொல்’ என்னும் முதல் நிலைக்குத் தன் ஈற்றில் நின்ற ‘செய’ என் எச்சத்தை உணர்த்தும் அகரத்தை ஏற்பித்து நின்றவாறு காண்க. ‘நளியென் கிளவி’ (உரி 25) என்றது ‘நளியென்றுசொல்லும் சொல்’ என்று பொருள் தந்த இடத்தும் ‘என்’ என்னும் எச்சம் தான் அவாவுதலின், இடைநின்ற ‘சொல்’ என்னும் முதல் நிலைக்குத் தன் ஈற்றில் நிற்கும் ‘செய்யும்’ என்னும் எச்சத்தை உணர்த்தும் ‘உம்’ என்பதனை ஏற்பித்து, நின்றவாறு காண்க. ‘தாவெனநின்றான்’ என்பது ‘தாவென்று சொல்லி நின்றான்’ என ‘என’ என் எச்சம் ‘சொல்லி’ என்னும் வினைகொண்டு நின்றது. இது சொல் எச்சம் அன்று. இங்ஙனம் எச்ச ஈறுகளை ஏற்றலின் சொல் என்பது முதல் நிலையாயிற்று. ‘என்’ என்பதற்கும் ‘சொல்’ என்பதற்கும் இடை நின்ற றகரவுகரம், அவ்விரண்டினையும் கூட்டுதற்கு வந்து நின்றது. எழுத்தெனப்படுப, (நூன். 1) ‘பெயரெனப்படுப’ (பெய. 6) ‘இடையெனப்படுப’ (இடை. 1) எனவும், ‘இலமென் கிளவி’ (புள்ளி-மய 25) ‘முழுதென் கிளவி’ (உரி. 28), ‘கடியென் கிளவி’ (உரி. 85), ‘மீன் என் கிளவி’ (புள்ளி. ம. 44) ‘தேனென் கிளவி’ (புள்ளி. மய. 45) எனவும் வருவன எல்லாம் இக்கூறியவாறே வந்த சொல்லெச்சம். இனி, செய்யுட்கண் வரும் செல்லெச்சமாயின் எமக்கு என, கல்கெழு கானவர் நல்குறூஉம் மகள் மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே (குறு. 71) என்புழி முன்னும், ‘குன்றம், குருதிப் பூவின் குலைக்காந் தட்டே’ (குறுந். 1) என்புழி “யாம் காந்தட் பூவாம் குறைவிலம்” எனப் பின்னும் கூற்று, சொல்லெச்சமாய் நிற்குமாறு உணர்க. இதற்கு விதி, சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை. |