சொல்லெச்ச முடிபு சூ. 45 | 307 |
புல்லிய கிளவி எச்சமாகும் (செய். 206) என்னும் சூத்திரம் என்று உணர்க. இனி, ‘உயர்திணை என்மனார்’ (கிளவி. 1) என்பதற்கு ‘ஆசிரியர்’ எனவரும் பெயர் சொல் எச்சம் என்று உதாரணம் காட்டினால் அது பொருந்தாது. சூத்திரம் செய்யுளாதலானும், அதுதான் முற்றுச் சொற்குப் பெயர் தோன்றாமலும் நிற்கும் என்று முற்கூறியது ஆகலானும் இது சொல் எச்சம் ஆகாமையுணர்க. வெள் இது சொல்லெச்சம் ஆமாறு இது வென விளக்குகின்றது. இ-ள் : சொல்லெச்சம் ஒரு சொற்கு முன்னும் பின்னும் சொல் மாத்திரம் எஞ்சுவதல்லது தொடராய் எஞ்சுதல் இன்று, எ-று. ‘உயர்திணை யென்மனார்’ என்புழி ‘ஆசிரியர்’ என்னும் சொல் முன்னரும், ‘மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே’ என்புழி ‘எமக்கு’ எனப் பின்னரும் ஒரு சொல் எஞ்சி நின்றவாறு கண்டு கொள்க. ஒரு சாரார் இவற்றை இசையெச்சம் எனக்கொண்டு, ‘சொல்வள வல்லது எஞ்சுதலின்றே’ என்பதற்குச் சொல்’ என்னும் சொல்வளவல்லது பிறிது சொல் எஞ்சுதல் இன்று’ எனப் பொருள் உரைத்துப் ‘பசித்தேன் பழஞ்சோறு தாவென்று நின்றான்’ என்புழித் ‘தாவெனச் சொல்லி’ எனச் சொல் என்னும் சொல் எஞ்சி நின்றது என்பர். ஆதி சொல் எச்சம் முன்னாராகவோ பின்னராகவோ தனிச் சொல்லளவில் எஞ்சுதல் ஆகும். (வாக்கியமாக எஞ்சுவது இல்லை). |