பக்கம் எண் :

308தொல்காப்பியம்-உரைவளம்

மழை பெய்தால் நாடு செழிக்கும் என்பார்கள் - இங்கு ‘முன்னோர்’ சொல்லெச்சம் ‘படிக்கவில்லை யாயின் என்ன கிடைக்கும்? தெரியுமில்லையா?’- 1அடி என்பது சொல்லெச்சம்.

சிவ

சொல் எச்சம் பற்றி நச்சினார்க்கினியர்.

சொல் எச்சம் இருவகைப்படும். ஒன்று செய்யுளியலிற் கூறப்படுவது. மற்றொன்று எச்சவியலிற் கூறப்படுவது.

1) செய்யுளியலிற் கூறப்படுவது :-

ஏதேனும் ஒரு சொல் அல்லது ஒரு தொடர், ஒரு கருத்துக் கூறத் தொடங்கும் போதோ (முன்னோ), கூறி முடிக்கும்போதோ (முன்னோ), கூறிமுடிக்கும் போதோ (பின்னோ) மறைந்து நிற்பது- அதாவது எஞ்சி நிற்பது சொல்லெச்சம். உதாரணம் :- “கல்கெழு கானவர் நல்குறு மகள் மருந்து எனின் மருந்து வைப்பு எனின் வைப்பு “(குறுந். 71) என்ற விடத்து முதலில் ‘எமக்கு’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்ளல் வேண்டும். ‘எமக்கு’ என்பது முதலில் எஞ்சி நின்றது எனப்படும். “குன்றம் குருதிப்பூவின் குலைக்காந்தட்டு” (குறுந். 1) என்றவிடத்து முடிவில், ‘யாம் காந்தட் பூவால் குறைவிலம்’ என்பது வருவித்து உரைக்கப்படல் வேண்டும். அது எஞ்சி நின்றது. எனவே, செய்யுளியலிற் கூறப்பட்ட சொல்லெச்சம் என்பது, கூறும் கூற்றுக்கு முன்னோ பின்னோ ஒன்றோ பலவோ சொல் எஞ்சி நிற்பது என்பதாம்.

2) இவ்வெச்சவியலிற் கூறப்படும் சொல்லெச்சம் என்பது ‘என் எச்சம்’ என்றும் சொல்லப்படும். ஏன் எனி்ன், ‘என்’ என்னும் சொல்லினிடமாகவே ‘சொல்’ என்பது எஞ்சி (மறைந்து) நிற்பதாகலின். ‘என’ என்பதன் பொருள் ‘என்று


1. அடி என்பது சொல்லெச்சம் ஆகாது; என்ன கிடைக்கும் எனும் வினாவுக்கு விடை. ஆதலின் இவ்வுதாரணம் பொருந்தாது.