பக்கம் எண் :

சொல்லெச்ச முடிபு சூ. 45309

சொல்ல’ என்பதாகும். ‘என’ என்பது என் + அ என பிரிக்கப்படும். இதில் உள்ள ‘அ’ என்பது ‘சொல்ல’ என்பதில் உள்ள ‘அ’ கரமாகும். அப்படியானால் ‘என’ என்பதன் முழுவடிவம் ‘என் + சொல் + அ’ எனபதாகும். அதுவே சுருங்கி ‘என’ ஆயிற்று. அப்படியானால் ‘என’ என்பதில் ‘சொல்’ என்பது எஞ்சி (மறைந்து) நின்றதாகும். அகரவிகுதி ‘என்’ என்பதில் சேர்ந்து வெளிப்படையில் இருப்பதாகும். இதனால் என் எச்சம் சொல் எச்சம் எனப்படும். சொன்னான், சொல்லி, சொல்ல, சொல்லும், சொன்ன எனவரும் முற்று எச்சங்களின் விகுதிகள் என் என்பதுடன் சேரச் சொல் என்னும் முதல்நிலை (பகுதி) மட்டும் எஞ்சி நிற்பது சொல்லெச்சம் ஆம். என்றான், என்று, என, நின்றதாகக் கொண்டு அச்சொற்களைச் சொல்லெச்சச் சொற்கள் என்னல் வேண்டும்.

வேறுபாடு:- 1) கருத்துத் தொடக்கத்தின் முன்னோ கருத்து முடிவின் பின்னோ ஏதேனும் ஒரு சொல்-ஒரு தொடர் எஞ்சி வருவது செய்யுளியற் சொல்லெச்சம். 2) என் என்னும் சொல்லில் சொல் என்பதனடியாக வரும் முற்று எச்சங்களின் விகுதிகள் வெளிப்படையிற் சேர்ந்து வரச்சொல் என்னும் பகுதிமட்டில் எஞ்சி நிற்ப வருவது எச்சவியற் சொல்லெச்சம். இதில் முன்பின் என்பதில்லை.

இவ்வாறு கொண்டு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் உணர்க.

இடக்கரடக்கல்

436. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்       (46)
  
 (அவை அல் கிளவி மறைத்தனர் கிளத்தல்)

ஆ. மொ. இல.

A word unfit to be altered in an assembly
is to be spoken in a hidden form.