இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது தகுதியும் வழக்கும் (கிளவி. 17) என்பதனுட் கூறப்படாது ஒழிந்து நின்றதோர் மரபு வழூடக்காத்தல் நுதலிற்று. உரை : நன்மக்களுட் கூறப்படாத சொல்லைக் கிடந்தவாறே சொல்லற்க; பிறிது வாய்பாட்டான் மறைத்துச் சொல்லுக, எ-று. 1 வ-று : கால்மேல் நீர் பெய்தும், வாய் பூசி வருதும் என வரும். சேனா இ-ள் : அவைக்கண் உரைக்கப்படாத சொல்லை அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் சொல்லுக, எ-று. அவைக்கண் வழங்கப்படுஞ் சொல்லை அவையென்றார். உ-ம் : 2‘ஆன்முன் வரூஉம் ஆகார பகரம் (எழுத். 333) எனவும், 3கண்கழீஇ வருதும், கால்மேல், நீர் பெய்து வருதும் எனவும், 4 ‘கரு முக மந்தி செம்பின் ஏற்றை’, புலிநின்றிறந்த 5நீரல் ஈறத்து (நற். 103) எனவும் இக்கர் வாய்பாடு மறைத்துப் பிறவாய் பாட்டாற் கூறியவாறு. ஈகார பகரம் என்பது போலக் கண் கழுவுதல் முதலாயின அவையல் கிளவியைக் கிடந்தவாறு கூறாது பிறிதோராற்றாற் கிளந்தன வல்ல வெனினும் அவையல் கிளவிப் பொருண்மையையுணர்த்தலின், ஒற்றுமை நயத்தான் அவையல் கிளவியைப்பிறி
1,3. மலங்கழீஇ வருதும் என்பது பொருள். 2. ஆன்.....................பகரம் = ஆப்பீ. 4. கருமுகம் - மந்தியின் குறியிடம்; செம்பின....ஆண் குரங்கின் (ஏற்றை) பின்பகுதி. 5. நீர் அல் ஈரம்-நீரால் வந்ததல்லாத ஈரம் அது புலியின் சிறுநீர். |