பக்கம் எண் :

இடக்கரடக்கல் சூ. 46311

தோராற்றாற் கூறிய வாய்பாடாகக் கொள்ளப்படும். இவை ‘தகுதியும் வழக்கும்’ (கிளவி. 17) என்புழித் தகுதியாய் அடங்கும் எனின், செத்தாரைத் துஞ்சினார் என்றல் முதலாயினவன்றே தகுதியாவன; ஆண்டுச் செத்தார் என்பது இலக்கணமாகலின் அதனானும் வழங்கப்படும். தகவு நோக்கிச் சொல் லுங்கால் ‘துஞ்சினார்’ என்றும் சொல்லப்படும். ஈண்டை அவையல் கிளவியாற் கிளத்தல் வழுவாதலின் மறைத்த வாய்ப்பாட்டானே இளக்கப்படும். அதனான் ஆண்டு அடங்கா என்பது.

6இது வழுவமை தியன்மையால் கிளவியாக்கத்துக் கூறாராயினார்.

*தெய்

இனிக் குறிப்பெச்சம் உணர்த்தற்பாலது, அது தெரிபு வேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே (பெய. 12) எனப் பெயரியலுள் ஓதுதலால் அதன்கண் சில சொற்களை மரபு வழுக்காக்க வேண்டுதலின் அவையமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : அவைக்களத்து வழக்கல்லாத சொல்லை மறைத்துப் பிறவாய் பாட்டான் மொழிக, எ-று.

உ-ம் : மறைத்துச் சொல்லுதல் இருவகைப்படும், மங்கல மரபினாற் கூறுதலும் இடக்கர் அடக்கிக் கூறுதலும் என.


6. இதனை வழுவமைதி என்பர் நச்சினார்க்கினியர்.

* தொல்காப்பியர் பத்து எச்சங்களும் பற்றித் தனித்தனியாகக் கூறிவந்தவர் இசையெச்சம் குறிப்பு எச்சம் பற்றித் தனித்தனிக் கூறவில்லை. ‘அவைதாம் தத்தம் குறிப்பின்’ (44) என்பதால் கூறினார் எனக் கொண்டனர் ஏனையுரையாளர். தெய்வச்சிலையார் அவையும் கூறப்பட்டனவாகக் கொண்டு இச்சூத்திரம் குறிப்பெச்சம் கூறுவது என்றும், பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும்’ (53) என்பது இசையெச்சம் கூறுவது எனவும் கொண்டார்.