பக்கம் எண் :

312தொல்காப்பியம்-உரைவளம்

மங்கல மரபினாற் கூறுவது:- செத்தாரைத் துஞ்சினார் என்றும் ஓலையைத் திருமுகம் என்றும் கூறுதல், இவை அவைக்களத்துப் 1பட்டாங்குக் கூறிற் குற்றம் பயக்குமாகலின் அவ்வாறு கூறினார் என்க.

இடக்கர் அடக்கிக் கூறுதல் :- கண் கழீஇ வருதும், கால்மேல் நீர் பெய்தும் எனப் 2பிற வாய்பாட்டான் வரும் பொருண்மையை மறைத்துச் சொல்லுதல்.

இவை வேறொன்றைக் குறித்துக் கூறுதலின் 3குறிப்பெச்சம் ஆயின.

நச்

இது மரபு வழுக்காக்கின்றது.

இ-ள் : அவை அல்கிளவி - நன்மக்களிடைக் கூறப்படுவது அல்லாத சொல்லினை, மறைத்தனர் கிளத்தல்-அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய் பாட்டால் கூறுக, எ-று.

உ-ம் : ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் (உயிர் 631) கண் கழீஇ வருதும், கருமுகமந்தி, செம்பின் ஏற்றை, *புலி நின்றிறந்த நீர் அல் ஈரத்து எனவரும் ஈகார பகரம் என்றது, ஓர் உயிர்மெய் எழுத்தாகக் கூறின் அவையல் கிளவியாம் என்று உயிரும் மெய்யுமாகப் பிரித்து அவ்வுயிர்மெய் எழுத்தையே கூறியது. ஒழிந்தன அவ்வாறு அன்றி, அவையல் கிளவிப் பொருளைப் பிறசொல்லான் உணர்த்திற்றேனும் அப்பொருளையே யுணர்த்தி நிற்றலின் அதனைப் பிறிதோர் ஆற்றான் மறைத்தனவே யாம்.


1. பட்டாங்கு-உள்ளபடியே.

2. ‘மலங்கழீஇ வருதும்’ என்னும் வாய்பாட்டால் வரும் பொருண்மையை மறைத்துக் ‘கண்கழீஇ வருதும்’ முதலிய வாய்பாட்டான் சொல்லுதல்.

3. குறிப்பு எச்சம்-குறிக்கப்படும் பொருளை எஞ்சி நிற்பது.

* களிறு நின்றிறந்த-பாடம்.