பக்கம் எண் :

எச்சவியல் சூ. 13

செய்யுட்குரிய சொற்கள்

391.இயற்சொ றிரிசொ றிசைச் சொல் வடசொலென்
 றனைந்தே செய்யு ளீட்டச் சொல்லே      (1)
  
 (இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே)

ஆங்கில மொழி பெயர்ப்பு

இலக்குவனார்

Words used in Poetry are ‘Iyarcol’,
‘Thirisol’, ‘Thisaiecol’ and Vadasol.

பிற்கால இலக்கண நூல்கள்:

நன்னூல் 270.

அதுவே

இயற்சொல் திரிசொல் இயல்பிற் பெயர்வினை
எனவிரண் டாகும் இடைஉரி யடுத்து
நான்குமாந் திசை வடசொல் அணுகா வழி

இலக்கணவிளக்கம் ; 171   ௸  ௸   ௸

தொன்னூல் விளக்கம் 42

“எச்சொலும் பெயர் வினை யிடையுரி யெகநான்கு
இவற்றுடன் பொதுவென இயற்சொல் திரிசொல்”

முத்துவீரியம்-ஒழிபியல் 48

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

இளம்

என்பது சூத்திரம்

இனி, இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இத்துணைப்பட்ட சொல்லினாற் செய்யுள் செய்யப் பெறும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.